31/10/14
11:45 பகல்
கவிதை - உதய்ஸ்ரீ
மறுமொழி ஏன் ?
பெண் : காக்கை என்று எண்ணி உன்னை நான் விரட்டவா
தண்ணீர் என்று எண்ணி அள்ளி தெளிக்கவா
கயவன் என்று எண்ணி உன்னை திட்டவா
யாரோ நீ ! இருந்தும் உனக்கு நான் மறுமொழி கூறுகிறேன்
ஏன் நான் !
ஆண் : பூவென்று எண்ணி உன்னை நான் கோர்க்கவா
புது மொழி என்று உன்னை அழைக்கவா
தாய் என்றெண்ணி உன் மடி படுக்கவா
பருவத்தை தருவாய் என்றெண்ணி கையேந்தவா,
பெண் : போவென்று சொல்லியும் போகவில்லை
போரதகாலம் உனக்கோ என்றாலும் கேட்கவில்லை
ஒழிந்தென்னை பார்க்கும் நீ என்ன பித்தனோ !
ஆண் : ஆம் ! உன்னை எண்ணி எண்ணி என்
மூளைச்சுவடுகளில் எல்லாம் உன் உருவங்கள்
செதில்களாய் படிந்து விட்டன அவற்றை எங்கனம் அறுப்பேன்
வெட்டினாலும் கசிவது உன் உதிரம் அல்லவோ
பெண் : உற்றோரும் பெற்றோரும் மற்றோரும் பார்க்க
வீதிவழி கை கோர்த்து நடக்க முடியாத என்னிடத்தில்
வீண் வாதம் செய்திடல் எங்கன நியாயம்,
அறிந்து அறியாதவன் போல் பிழை செய்தல் முறையோ,
வெண்மதியொத்த பூக்களையும் தொடுத்தணியும்
அருகதையற்றவளாய், பிய்ந்துபோன நார்கள் ,
காய்ந்துபோன சருகாய் வெயில் பட்டு வாடுவதுபோல்
என்மனம் தளர்ந்து இருக்கையில் அதில் ஊஞ்சல்
கட்ட எண்ணுதல் முறையோ,
ஆண் : தளர்ந்த நார்களே வழுமிக்கனவாய் இழகிய பூக்களை
தன்னுடனே பின்னி பிணைத்து மாலையாய்
தெய்வத்துக்கு சூட்டப்படுகின்றன அதை அறிந்தும்
அறியாதவளாய் என்னுடன் வாதம் செய்தல் எங்கன நியாயம்
பெண் : சொல்வன்மை மிக்கவனே சோற்று வயலை
பதம்பார்க்கும் வெள்ளெலி போல்...
ஆண் : வேண்டாம் வேண்டாம் - எலி என்று என்னை எண்ணி
நகையாதே .....
உன் எண்ணங்களில் கொஞ்சிவிளையாடும் ஏர்முக
நாயகனும், கரும்புத்தீவுக்கு சொந்தக்காரனும் நானே
இனியேனும் நீ எதிர்மொழி கூறாதிருப்பாயோ
என்னிருள் போக்கவந்த இளஞ்சிவப்பே,
( வாயாடி தோற்றவளாய் வரம்பை மீறவும் முடியாது
வேருன்றவும் முடியாமல் வீண் பலி சுமக்கவும் முடியாமல்
தள்ளாடி நின்ற அவள் தயங்காமல் கூறினாள் )
பெண் ; இருள்கவ்வும் ஒளிமுகத்தோனே, காதல் பித்தால்
நீ குழைக்கும் சந்தனத்தை பூசும் சிலையல்லனான்
கொல்லனது உலையில் குழைத்தூற்றிய பசும்பொன்னால்
ஆனா தீவினம் ,வெட்டியானது உலையில்
காயுமேயொழிய உன் விரலில் அல்ல
என்றே கண்ணீர்மல்க கூறி ஓடி மறைத்தாள்.
நன்றி
உதய்ஸ்ரீ