Thursday, June 7, 2018

த000036-முதல் இரவு - கவிதை - உதய்ஸ்ரீ

கவிதை - உதய்ஸ்ரீ 
12pm









art by udhaisri (A)Jaya



                                                            முதல் இரவு 

சின்னச்சிறு வயதினிலே சிவாஜியும் பத்மினியும் பால் சொம்புடன்
முதல் இரவின் கதவுதனை அடைத்த படகாட்சிதனை பார்த்ததுண்டு
வளர்ந்த பொழுதினில் ரஜினியும் ராதாவும் பூ பந்து கட்டிலினில் படுத்துக்கிடந்த பட காட்சிதனை கண்டதுண்டு, வளர்ந்த போதுதான்
அறிந்தேன் முதலிரவின் இரகசியத்தை.
தாயின் மடியில் உறங்கிய கண்கள், தந்தையின் தோளில் புதைந்த முகங்கள், முதல் முறையாக கணவனின் மார்பகத்தில் புதைந்தது,
சிலிர்த்த மயிர்களும், சில்லென ஊரும் உமிழ் நீரும், சூடுபறக்கும்
சூடு நீராய் மாறிப்போனது, நம் வீடு அண்டைவீடாய் மாறிப்போக,
அண்டைவீடோ நம் வீடாய் மாறிப்போக,
  என் கட்டிலை யாருக்கும் பங்கிடாத நான், என் உடலையும் பாதியாய்
அவனுக்கு பங்கிட்டு கொடுக்க, வெயிலையும் உள்ளே நுழையவிடாது
போர்த்தி உறங்கும் என் போர்வைக்குள், அவன் முழு உடலையும் நுழைத்துக்கொள்ள இடம் தந்தது, பேச பல இருந்தும், ஒருவார்த்தை பேசாது மௌனத்தை மணமேடையில் கட்டிவிட்டு, விழிப்பாட, விரல் ஆட கட்டில் இசைக்கும் இசைக்கு இரு உடல் சங்கமம்.

நன்றி 

உதய்ஸ்ரீ