உயிர் தின்னும் உமிழ் நீர்
கவிதை : உதய்ஸ்ரீ
அவன் நினைவுகளை நான் சுமக்கும் ஒவ்வொரு தருணங்களும் சுகமானதருணங்களே.............
சூடுபறக்கும் சுடுமணலில் பட்ட கால்கள் பொரிந்தாலும் விலகாத மனத்துடனே, இருக்கை ஒன்றிணைத்து நடைதப்பா உணர்வுடனே நடந்த மணல்பரப்பில் சூறாவளியில் சூறையாடிய படகின் உதிரிபாகங்கள் சிந்தியும் சிதறியும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் மண்புதைந்து விழிபிதுங்கி கசிந்து கயல்தொங்கி ஒருவாட்டாய் கூன்குப்பி மண்கவ்வி குடைசாய்ந்து சலனமில்லாதிருக்க ,அதில்
ஒட்டி உறவாட என் ஒற்றை முதுகு தண்டினை சாய்த்தே , அவன் தந்த சுவாச சூட்டில் வேர்த்தரும்பி வழிந்தோடும் வேர்வைகளை தன்னோடிணைத்து கொண்டு சென்றது எங்கோ.....காற்று !...
அவன் மேல் சட்டை பொத்தானும் என் விரலோடு பேசிப்பழக, கட்டிவைத்த கூந்தலும் கட்டவிழ்த்து ஆட்டம் போடா இடைவிடா இடைதனில் அவன் மேய்த்தழுவி உயிர்த்தின்னும் உமிழ்நீர் உள்சென்று பசியாத்தும் அத்தருணம் சுகமான தருணங்களே,
அந்தாதி பாடும் அயலானின் மொழிபோல செவிகொடாது மடல் சாயாது
மது உண்டு தலைக்கேறியே சுருண்டு சுருள் முட்டி வெளிவராது துளிர்க்கும் உயிர்நாடியின் சிறுமுத்து சிதையுண்டு உயிர்துடிக்கும் நரம்புகள், பரல்களாய் ஓசையெழுப்பும் அத்தருணம் சுகமானதருணங்களே,
கரையான் விட்டு சென்ற கறைபடாதா கட்டுமரத்தில் ஓடி விளையாடி ஒன்றிரண்டை விட்டுச்சென்ற மூஞ்சுறுவின் நாற்றம் எடுக்கும் தின்பண்டமாம் அயிலையின் செதில்களை போருக்கு அணிவகுத்து செல்லும் ராணுவத்தின் படைபோல் ஊர்ந்து சென்று பாய்மரத்தின் அடியில் புதைக்கும் எறும்பு சாரைகளின் ஓசைபோலே வார்த்தைகளை உள்புதைத்தே உயிர்த்தின்னும் உமிழ்நீரின் ஓசைகள் அலைகளோடு பின்னிப்பினையும் அத்தருணம் என்றும் சுகமானதருணங்களே.
நன்று
உதய்ஸ்ரீ