Saturday, December 2, 2017

த000024 - கவிதையும் - விடுகதையும்- உதய்ஸ்ரீ

28/11/13
7.30 பகல் 
கவிதையும் - விடுகதையும்- உதய்ஸ்ரீ 

                                      1:  விடுகதை 

சிக்கி முக்கி  கல்லைப்போல உரசிதா பாத்தாலும் 
பத்ரமாத்து தங்கோபோல நிறம் மாறாம இருக்கிறீயே
முறுக்கு மீசைக்காரனையு முந்தானையில்
முடிச்சிவைக்கு வித்தையை நீ 
எங்க கத்துக்கிட்ட ? 

சூரியனபோல நீயு சுத்தமான ஆளுப்புள்ள
ஊருக்குள்ள நீயில்லாத வீடேது உண்டாபுள்ள
மங்கலமா உமுகம் ஜொலிக்கறத பாத்து 
மண்ணுக்குள்ள கெடக்கு உன்ன 
மனநிறைவா பூசிக்கிறோ,

நீ யாருன்னு தெரிஞ்ச சொல்ல சொல்லு 
விடையேது தெரிஞ்ச தள்ள சொல்லு.........


                                          2 : விடுகதை 


2.38 
20/11/17

 அண்ட சராசரத்தை அழித்திடுவான்
அக்கினி குண்டத்தையு பொசிக்கிடுவான் 
காமுகனோ இல்லை சிறந்த கைகாரனோ
கன்டோ துண்டாய் பிளந்திடுவான் 
கார் மேகமாய் ஓடிடுவான் 
உயிர்களையெல்லாம் விழுங்கிடுவான் 
ஜடாயுதம்மின்றி சாய்த்திடுவான்
ஜென்ம ஜென்மமாய் நீ அலைந்தாலும் 
அவன் சடைமுடி ஒன்றினையும் -நீ 
அசைத்திட முடியாது 

யாருன்னு தெரிஞ்ச நீ சொல்லு 
விடையேது தெரிஞ்ச தள்ளி நில்லு .....

நன்றி 
உதய்ஸ்ரீ Image result for magic images free download

No comments:

Post a Comment