14/12/13
1.50 pagal
கவிதை /உதய்ஸ்ரீ
படம் பார்த்து எழுதிய கவிதை
போகும் பாதையின் வழிகளை மறந்தேன்
கொடியவை எல்லாம் உன் முன் குழந்தையாய் சிரிக்க
கல்லும் பாறைகளும் பஞ்சென உன் பாதம் நோகா
செல்லும் பாதைதனைக்காட்ட,எதிர் வரும் கொடிய
விலங்குகளும் விலகியே ஓட,நிலவின் ஒளி வெண்முத்தை
சொரிய, காற்றும் குளிராய் பனிபோல் பூக்க
இரவும் பகலும் ஒன்றெனகலந்து, காதல் மந்திரம்
நம் காதினுள் ஜெபிக்க, நீ தொட்டவை எல்லாம்
உயிர் பெற்றேழுந்து, உன்னை வணங்கி இமையம் செல்ல,
மரங்கள் எல்லாம் குடையென விரிந்து, நிழல் தர எண்ணி
தன் நிலைமறந்தே மயங்கிக்கிடக்க, காதலியை, அள்ளிதழுவும்
காதலன் போல் அதனிலிருந்து உதிரும் தழைகளை காற்றுவந்து அள்ளிக்கொண்டு செல்ல, தன் முகம் விரிக்கும் தளிர்தாமரையும்
நின் பாத சிகப்பினைக்கண்டு முகம்தனை திருப்ப இக்கானகத்தே
உன்னுடன் நான் நடக்கும் நாட்களைமறந்தே உனை நான்
சுமக்க இச்சென்மம் போதுமோ, உன் தளிர் நுனி விரல் நுனிகளை
என் தோளில் சாய்தே, கானல் நீரை கண்ணால் வென்று,
உன்னை நான் அணைத்தே உயிர் பெற்றிடுவேன்.
நன்றி
உதய்ஸ்ரீ