art by Jaya (A) Udhaisri
6/5/18
1.50 பகல்
கவிதை - உதய்ஸ்ரீ
இடையில் நுழைந்தவன் எவன்
அடுப்படியில் அடுக்கியபடியே தவாவில் வெண்மதியை வார்த்தெடுக்கும் சுருள் முடி சுந்தரி சுணக்கியபடியே சுவைத்தாள் வார்த்தைகளை ,
நெய் வார்த்து அன்பின் தேன்வார்த்து, மொருவலென வார்த்தெடுத்த தோசையை பள பளக்கும் தட்டின் மேல் படரவிட்டு அன்பின் நினைவுகளை வண்ணக்கலவையாய் சட்டென சட்டினியை தோசையுடன் சுவைத்திட தோசையின் அருகில் வைத்து தன் கணவனுக்கு கொண்டு செல்ல பார்க்கையில் இடுக்கில் நுழைந்தவன் எவனோ ......ஆ ....ஆ .... மா ....மா....எல்லாம் பறக்க அடுக்களை அளக்கலையாய் மாறி போக ,
திடு திடு வென பதறியபடி ஓடி வந்தான் கணவன் .....என்ன என்ன ஆச்சி...
சுந்தரி : அங்க அங்க ஆ ......
கணவன் : என்ன மா என்ன ஆச்சி யாரு
சுந்தரி : கரப்பான் அங்க கரப்பான் பூச்சி ..
கணவன் : அடச்சீ எழுந்தது
நன்றி
உதய்ஸ்ரீ
Very nice
ReplyDeletemigavum nandri
ReplyDelete