Friday, February 1, 2019

த000046 - படுத்துறங்க - உதய்ஸ்ரீ

2.3 பின்
கவிதை :- உதய்ஸ்ரீ
                                                        படுத்துறங்க  

உன் இதழ் மொட்டில் படுத்துறங்க ஆசை கொண்டதேனோ என்மனம் ,
புரியவில்லை ..ஏனோ புரியவில்லை ...
மாயம் என்ன செய்தாய் நான் மயங்கும் நிலைகொள்ள ,
சிந்திக்கும் செயல் பெற்றும், செயலிழந்து நிற்கின்றேன் .

வண்ணத்தை தந்த நீ தூரிகையை தர மறந்தாயோ
எண்ணத்தை தந்த நீ எழுத்தை தர மறந்தாயோ
தலையணையை தந்த நீ என் தூக்கத்தை தர மறைந்தாயோ
மழை காலத்தில் பூத்த காளான்போல் மழை முடித்ததும் மறைவாய்யா,
இல்லை எதிர்காலம் வரைவருவாயோ,
மவுனத்தை மட்டும் உதிர்த்து விட்டு மாயமென மறைத்தாய் எங்கோ நீ .....

சல சலக்கும் ஓடையில் சருகுகள் மிதப்பது போல் உயிரற்று மிதக்குகிறேன் ,
நற்காரியங்களைச்செய்யும்  மறவகுலத்து தேவனே
ஊற்று  நீரில் உயிர்காக்கும் மூலிகையை இம் மறவச்சியின் மனம்காக்க தருவாயோ இல்லை
கருவை கருவறுக்கும் கள்ளிச்செடியை தருவாயோ,
எவைத்தந்தாலும் உயிர்பெற்றுக்கொள்ளும் ஊமத்தம் செடிபோல உன்வழிதனை நான் சுமப்பேன்.
நன்றி 
உதய்ஸ்ரீ 

3 comments: