சுகமான தருணங்கள்
கவிதை :- உதய்ஸ்ரீ
அவள் நினைவை நான் சுமக்கும் ஒவ்வொரு தருணங்களும் சுகமானவையே ...
பரந்த மணல் பரப்பில் சுடுமணலில் பட்ட கால்கள் பொறிந்தாலும் விலகாத மனதுடனே அவளோடு கைகோர்த்து, உடைந்த செதில்களாய் அங்கும் இங்கும் தன் உடல் பாகங்களை உதிர்த்து அரைஉடளோடே காட்சி தரும் பழைய படகின் ஓர விளிம்பில் எங்கள் இருவரின் முதுகு தண்டையும் அதில் சாய்த்தே பேசிய கதைகளை மீண்டும் மீண்டும் பேசி நேரம் ஏன் நகர்கிறதோ என்றெண்ணும் மனதோடு அவள் விரல்கள் என்னோடு இணைந்து எனை கடந்து சென்ற அத் தருணம் சுகமான தருணங்களே ....
அவள் மடிதனில் இளைப்பாறி, அவள் விரல் கொண்டே என்தலை கோதி என் உடலை தீமூட்டிய அத்தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சுகமான தருணங்களே,
மனம் ஆயிரம் பேசியும் வெளிவரும் ஒன்றிரண்டு வார்த்தையும் உடைபட்டு அவள் விரல் முகர்ந்து எச்சில் பதித்த அத்தருணம் நினைக்கும் போதெல்லாம் சுகமானதருணங்களே ,
முந்தைய கடந்து சென்ற கதையெல்லாம் பேசி பேசி அவள் சிரிக்க நான் ரசிக்க வரும் சுண்டல் தான் தவிர்த்து அவள் அசந்த நொடிப்பொழுதில் நான் தந்த முத்தம்தனை இரவெல்லாம் எண்ணி எண்ணி கண்விழித்த அத்தருணம் என்றும் சுகமானதருணங்களே ,
வெட்ட வெளியும் தனி அறையாய் காட்சிதந்து கண் மறைக்க, இருள் சூழ்ந்த நொடியென்றே எண்ணினான் செல்லமாய் கடித்து சிவந்த இடையில், முத்தாய் வேர்த்தொழுகும் வேர்வைதனை நான் துடைத்த அத்தருணம் எண்ணும்போதெல்லாம் சுகமான தருணங்களே,
கூடடைந்த கோழிக்குஞ்சி தாய்தந்த இறைதனை உண்ணாது தரை கொத்தி தரை கொத்தி அண்ணாந்து தாய்முகம்பார்த்தே ஓடி ஆடி சண்டையிட்டு தன் உடன் பிறந்த குஞ்சிகளோடே விளையாடி கழித்தாலும் தாயின் குரல் கேட்டு தாயின் இடைபுகுந்து சூட்டை சுவாசித்து தன் முகம்புதைத்து மடி தூங்கும் குஞ்சிபோல் உன் சுவாசத்தில் நான் தூங்கும் நாள் என்றோ என்று எண்ணி எண்ணியே காத்திருக்கும் இத்தருணம் என்றும் எனக்கு சுகமான தருணங்களே.
நன்றி
உதய்ஸ்ரீ

So you can write songs for movies
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteவிறல்... விரல் அல்லவா?
The moments which I spent with my dad...
ReplyDeleteஅருமை
ReplyDeleteLoved it <3
ReplyDelete