Tuesday, January 30, 2018

த000030 - நிழல் வண்ணம் -வர்ணனை -கவிதை - உதய்ஸ்ரீ

1/12/14
9:15 பகல்                             நிழல் வண்ணம் -வர்ணனை 
கவிதை - உதய்ஸ்ரீ 


art by udhaisri (A) Jaya






வெலேரிய கண்களை உடைய ஓடை
மேகத்தை தன் முதுகில் சுமந்து நிற்பது போல் பெருமிதம் கொள்ளும்
மலை குன்றுகள் , உறங்காத நிலவு ,இருள் படர்ந்த மேகம் ,அமைதியாய்
உலவிடும் காற்றலைகள், முடித்து வைத்த கூந்தலுடனே ஒற்றையடி
பாதையில் சத்தமின்றி நடக்கும் அவள் பாதங்கள்.
ஆந்தையின் கண்ணொளிப்பட்டு தெறித்த அவள் மேனியின் நிழல் படுக்கை சற்றே அவள் பின் நடந்து செல்ல அந்நிழலைக்கண்ட வானமும் அவள் மேல் காதல் கொள்ள,
அவள் நிழல் படுக்கையே இத்தனை எழில் அழகு கொண்டவையெனில் ,
மைகொண்ட கண்களையுடைய அப்பதுமை எத்தனை அழகு மிக்கவளாய் விளங்குவாள் என்று எண்ணிய சேரமாதேவன், சேற்று வயல்லென்றும் பாராமல் வீரமென பாய்ந்தோடும் தன் குதிரையின் லாவகத்தை தன் கையால் பற்றியபடியே வயல்களை எல்லாம் சிதறடித்து செல்லுகையில் தெறித்த அச் சேற்றின் குழம்புகள் உயர்த்த
குன்றுகளின் மேல் பட்டு தெறித்து சிதறிவிழ, அக் குன்றுகளில் வாழும் பறவைகளும் விலங்குகளும் உலகத்தின் முடிவுகாலமோ என்று எண்ணி அங்கும் இங்குமாய் சிதறி ஓட அவைகள் எழுப்பும் குரல் இடி ஓசைபோல் வானத்தை எட்ட அவள் அழகை காண எண்ணி காதலை சுமந்து செல்லும் அவன் காதுகளுக்கு மட்டும் எவையும் கேட்காமல் அவளை காண எண்ணி தன் குதிரையின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி அவள் அழகை காண விரைந்தான்.
                                                     
நன்றி                                                    
உதய்ஸ்ரீ

Friday, January 19, 2018

த000029- ஆறுபடையில் குடியிருக்கும் அற்புத முருகன் -கவிதை - உதய்ஸ்ரீ

      ஆறுபடையில் குடியிருக்கும் அற்புத முருகன்  

கவிதை - உதய்ஸ்ரீ                               






அடர்ந்த காடுகள், அயலாது ஓடும் அருவிகள் அதில் புதைந்து ஓடும் மீன் குட்டிகளை கொத்திச்செல்லும் மீன்கொத்தி பறவைகள், முள்கள் நிறைத்த மூங்கில்கள்,பட்டுப்போல் படர்ந்த புல்வெளிகள், பல்லை இளிக்கும் மந்திகள், சேற்று வயல் நிறைந்த மழை சாரல்கள், பாறையில் முகம் புதைத்து ஓடும் ஓணான்கள், சலசலக்கும் ஓடைகள், சாமந்தி பூவை சுமக்கும் பச்சிளம் தளிர்கள், நிலவுக்குள் புகுந்த கருமைகள், நில்லாது ஓடும் மேகங்கள், சர சர வென சரியும் மணல் திட்டுகள், சரியாது அதில் ஓடும் எருமைகள், கனத்த பால்மாடியை சுமந்து செல்லும் பசு கூட்டங்கள், கனநேரம் ஆனாலும்  மரணமென்று தப்பி  ஓடும் ஆட்டு மந்தைகள்,  பாம்புக்கு போட்டியாய் புற்றேழுப்பும் எறும்பு சாரைகள் அதற்க்கு எல்லாம் இடம் தராது புற்றை மிதித்தோடும் பன்றி கூட்டங்கள், சேற்றில் முளைத்த தாமரைகள், சூரியனை தவிர யாரையும் பார்ப்பதில்லை என்று முகம் திருப்பும் சூரியகாந்தி மலர்கள், இவற்றை எல்லாம் கடந்து மலை உச்சியில் குடியிருக்கும் கந்தக்கோட்டை முருகனின் பேரழகை காண சலியாத மனதுடனே பார்க்க கடந்து   செல்லும் பக்த கோடிகள்.

நன்றி                                     
உதய்ஸ்ரீ 

Thursday, January 11, 2018

த000028 - சென்னை - கவிதை : உதய்ஸ்ரீ

கவிதை : உதய்ஸ்ரீ                                               




                                               18/7/16
                                               5.30                                           




                                                                 சென்னை 




தமிழ் வளர்த்த பிள்ளைகளுள் தலை பிள்ளை சென்னையடா
நெட்டே இவன் வளர்ந்தான் நெடுமுகில் போலவேடா
ஊர்பிள்ளை தான் வளர்த்து உயர்தேதான் நின்றிடுவான்
தன் மொழியின் பெருமைதனை உலகத்துக்கு உணர்த்திடுவான்.

தன் இடை தொட்ட ஆழியுடனே ஆழகாய் சிரித்திடுவான் மெரினாவில்
முந்தி ஓடும் வாகனத்துடனே வளைந்திருப்பான் முகப்பேரில்
தன் மூச்சி விட இடம்மின்றி பூத்திடுவான் டி. நகரில்
வழிந்தோடும் மக்களுடனே வளம் செய்திடுவான் வடபழனியில்

ஒற்றுமையை கற்பிக்க சென்னைக்கு நிகருண்டோ
செந்தமிழில் கவிபாட எம்மையின்றி ஆளுண்டோ
ஆலமரம் போல நாங்க  அனைவரையும்  தாங்கிடுவோம்
அன்புக்கு அடிமனாங்க அன்னம்மிட்டே மகிழ்ந்திடுவோம்

கோவில் குளமுண்டு கூத்துடனே நடனமுண்டு
நல்லிசையுடனே கல்வியுண்டு நற்றமிழ் மாந்தருண்டு
எல்லோருக்கும் உதவிடும் கரங்கள் கோடி இங்குண்டு
அடை மழை வந்தாலும் அதை வெல்லும் துணிவுண்டு

சுட சுட இட்டிலியுண்டு சுவையான பொங்களுண்டு
வடை பாயாசத்துடனே தலை வாழை விருந்துண்டு
அஞ்சுக்கு பத்துக்கு வயிறார உணவுண்டு
வந்தவரை வாழவைக்க போதுமான நிலமுண்டு

சென்ட்ரல் முதல் கொண்டு காசிமேடுத்தொட்டு
போரூர் மேலேறி ஆவடியில் வலம் வருவோம் நாங்கள்
ரிப்பண்பில்டிங் உடனே கோல்டுடென் பீச் உண்டு
பக்தியுடன் நாங்கள் செல்ல பார்த்தசாரதி கோவிலுண்டு

கிண்டி பார்க்குடனே விவேகானந்தர் இல்லமுண்டு
எங்க தமிழ் புலமைய சொல்லிடவே வள்ளுவர் கோட்டம்முண்டு
தாமஸ் மௌண்ட்டுடனே ஆயிரம் விளக்கு மசூதியுண்டு
எங்க பெருமை நாகசொல்ல எங்க கூட சென்னையுண்டு

இவன் வயதோ நானுறு  முப்பாட்ட வெச்ச பேரோ மதுராசு
இவன் செல்ல பேரோ மேட்டராஸ் நாகதா கூப்பிடுவோ சென்னையினு

நன்றி
உதய்ஸ்ரீ




Wednesday, January 10, 2018

த000027 - நனைத்த தலையணை -கவிதை - உதய்ஸ்ரீ



                                       நனைத்த தலையணை 

கவிதை - உதய்ஸ்ரீ ♡♡♡
10/1/2018


♡♡♡







பச்சை வண்ணமாய் பைங்கிளிகள் எங்கும் பறந்தோட
வெண்முத்தை சொரிந்துவிட்டு எங்கோசென்ற சந்திரனும் முகன் மறைக்க
காக்கைகள் எல்லாம்  தன் குஞ்சுடனே கூடு  வந்து இளைப்பாற
ஆந்தையும்  கோட்டானும் கண்ணொளிபெற்றே உற்றுப்பார்க்க
கருமை நிறம் தந்த கொடையவனும் தன் காதலியின் அழகில் முழ்கி கிடக்க
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் நள்ளிரவும் பாராது  மணம் வீச
சாலை வீதியெங்கும் விளக்கொளிகள் தன் ஆடை மாற்ற
அன்னியன் எவனும் வந்து விடுவானோ என்றே கண்ணுறங்காது
காத்துநிற்கும் காவலனது கண்ணும் தோய்ந்து போக
என்னினும் கூர்மை எவரும் உண்டோ என்ற இறுமாப்புடனே
தன் நெஞ்சுரம் நிமிர்த்திநிற்கும் வீரனது வேலும் நிமிர்த்து  நிற்க
நான் மட்டும் என் தொழிலை மறந்து அவன் நினைவால் வாடும் நிலைகண்டு தலையணையில் முகம் புதைத்தே கண்ணீரினால் தலையணை நனைந்தனவே தவிர அவன் இதயமல்ல.........

நன்றி 
உதய்ஸ்ரீ                                                    

Wednesday, January 3, 2018

த000026 - கடவுளின் குரல் - கவிதை - உதய்ஸ்ரீ


 கவிதை - உதய்ஸ்ரீ                                                                  Image result for images of love  

5/2/13
8.00 பகல் 

                                               கடவுளின் குரல்

அது இது எது
என்று புலம்பிடும் மக்கள்
அவன் இவன் உவன்
என்று ஒன்றும்மில்லை
கார் பனி மழை
இவற்றை கடந்தே சென்று
பொன் மண் பெண்
பற்று விட்டிடுமாயின்
தொட்டது நிலைத்திடும்
விட்டிட்டு விலகிடு மனமே

                                             பூமி சிரித்தது 


சூரியன் மறைந்தான் இரவு விழுந்தது
இரவு விழுந்ததால் கனவு பிறந்தது
கனவு பிறந்ததால் காதல் பிறந்தது
காதல் பிறந்ததால் கவிதை விழுந்தது
கவிதை விழுந்ததால் உணர்வு பிறந்தது
உணர்வு பிறந்ததால் உயிர்கள் இணைந்தது
உயிர்கள் இணைந்ததால் மழலை  பிறந்தது
மழலை  பிறந்ததால் பூமி சிரித்தது
பூமி சிரித்ததால் உலகம் வளர்த்தது

                                    பிரிவின் வலி 

காதல் அனுபவம் இல்லை
காதலித்த அனுபவமும் இல்லை
பிரிவின் வலி அறியேன்
காதலின் துடிப்பறியேன்
உன் பாதசுவடுகளை
பார்த்த பின்பே விடிவெள்ளிக்காக
காத்திருக்கும் ஜோதிட வித்தகனானேன்
பிரிவின் வலி நெஞ்சின் வலியைவிட
கொடுமையானது என்பதை உணர்ந்தேன்

நன்றி 

உதய்ஸ்ரீ