ஆறுபடையில் குடியிருக்கும் அற்புத முருகன்
கவிதை - உதய்ஸ்ரீ
அடர்ந்த காடுகள், அயலாது ஓடும் அருவிகள் அதில் புதைந்து ஓடும் மீன் குட்டிகளை கொத்திச்செல்லும் மீன்கொத்தி பறவைகள், முள்கள் நிறைத்த மூங்கில்கள்,பட்டுப்போல் படர்ந்த புல்வெளிகள், பல்லை இளிக்கும் மந்திகள், சேற்று வயல் நிறைந்த மழை சாரல்கள், பாறையில் முகம் புதைத்து ஓடும் ஓணான்கள், சலசலக்கும் ஓடைகள், சாமந்தி பூவை சுமக்கும் பச்சிளம் தளிர்கள், நிலவுக்குள் புகுந்த கருமைகள், நில்லாது ஓடும் மேகங்கள், சர சர வென சரியும் மணல் திட்டுகள், சரியாது அதில் ஓடும் எருமைகள், கனத்த பால்மாடியை சுமந்து செல்லும் பசு கூட்டங்கள், கனநேரம் ஆனாலும் மரணமென்று தப்பி ஓடும் ஆட்டு மந்தைகள், பாம்புக்கு போட்டியாய் புற்றேழுப்பும் எறும்பு சாரைகள் அதற்க்கு எல்லாம் இடம் தராது புற்றை மிதித்தோடும் பன்றி கூட்டங்கள், சேற்றில் முளைத்த தாமரைகள், சூரியனை தவிர யாரையும் பார்ப்பதில்லை என்று முகம் திருப்பும் சூரியகாந்தி மலர்கள், இவற்றை எல்லாம் கடந்து மலை உச்சியில் குடியிருக்கும் கந்தக்கோட்டை முருகனின் பேரழகை காண சலியாத மனதுடனே பார்க்க கடந்து செல்லும் பக்த கோடிகள்.
நன்றி
உதய்ஸ்ரீ
கவிதை - உதய்ஸ்ரீ
நன்றி
உதய்ஸ்ரீ
No comments:
Post a Comment