Tuesday, January 30, 2018

த000030 - நிழல் வண்ணம் -வர்ணனை -கவிதை - உதய்ஸ்ரீ

1/12/14
9:15 பகல்                             நிழல் வண்ணம் -வர்ணனை 
கவிதை - உதய்ஸ்ரீ 


art by udhaisri (A) Jaya






வெலேரிய கண்களை உடைய ஓடை
மேகத்தை தன் முதுகில் சுமந்து நிற்பது போல் பெருமிதம் கொள்ளும்
மலை குன்றுகள் , உறங்காத நிலவு ,இருள் படர்ந்த மேகம் ,அமைதியாய்
உலவிடும் காற்றலைகள், முடித்து வைத்த கூந்தலுடனே ஒற்றையடி
பாதையில் சத்தமின்றி நடக்கும் அவள் பாதங்கள்.
ஆந்தையின் கண்ணொளிப்பட்டு தெறித்த அவள் மேனியின் நிழல் படுக்கை சற்றே அவள் பின் நடந்து செல்ல அந்நிழலைக்கண்ட வானமும் அவள் மேல் காதல் கொள்ள,
அவள் நிழல் படுக்கையே இத்தனை எழில் அழகு கொண்டவையெனில் ,
மைகொண்ட கண்களையுடைய அப்பதுமை எத்தனை அழகு மிக்கவளாய் விளங்குவாள் என்று எண்ணிய சேரமாதேவன், சேற்று வயல்லென்றும் பாராமல் வீரமென பாய்ந்தோடும் தன் குதிரையின் லாவகத்தை தன் கையால் பற்றியபடியே வயல்களை எல்லாம் சிதறடித்து செல்லுகையில் தெறித்த அச் சேற்றின் குழம்புகள் உயர்த்த
குன்றுகளின் மேல் பட்டு தெறித்து சிதறிவிழ, அக் குன்றுகளில் வாழும் பறவைகளும் விலங்குகளும் உலகத்தின் முடிவுகாலமோ என்று எண்ணி அங்கும் இங்குமாய் சிதறி ஓட அவைகள் எழுப்பும் குரல் இடி ஓசைபோல் வானத்தை எட்ட அவள் அழகை காண எண்ணி காதலை சுமந்து செல்லும் அவன் காதுகளுக்கு மட்டும் எவையும் கேட்காமல் அவளை காண எண்ணி தன் குதிரையின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி அவள் அழகை காண விரைந்தான்.
                                                     
நன்றி                                                    
உதய்ஸ்ரீ

4 comments: