Wednesday, January 10, 2018

த000027 - நனைத்த தலையணை -கவிதை - உதய்ஸ்ரீ



                                       நனைத்த தலையணை 

கவிதை - உதய்ஸ்ரீ ♡♡♡
10/1/2018


♡♡♡







பச்சை வண்ணமாய் பைங்கிளிகள் எங்கும் பறந்தோட
வெண்முத்தை சொரிந்துவிட்டு எங்கோசென்ற சந்திரனும் முகன் மறைக்க
காக்கைகள் எல்லாம்  தன் குஞ்சுடனே கூடு  வந்து இளைப்பாற
ஆந்தையும்  கோட்டானும் கண்ணொளிபெற்றே உற்றுப்பார்க்க
கருமை நிறம் தந்த கொடையவனும் தன் காதலியின் அழகில் முழ்கி கிடக்க
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் நள்ளிரவும் பாராது  மணம் வீச
சாலை வீதியெங்கும் விளக்கொளிகள் தன் ஆடை மாற்ற
அன்னியன் எவனும் வந்து விடுவானோ என்றே கண்ணுறங்காது
காத்துநிற்கும் காவலனது கண்ணும் தோய்ந்து போக
என்னினும் கூர்மை எவரும் உண்டோ என்ற இறுமாப்புடனே
தன் நெஞ்சுரம் நிமிர்த்திநிற்கும் வீரனது வேலும் நிமிர்த்து  நிற்க
நான் மட்டும் என் தொழிலை மறந்து அவன் நினைவால் வாடும் நிலைகண்டு தலையணையில் முகம் புதைத்தே கண்ணீரினால் தலையணை நனைந்தனவே தவிர அவன் இதயமல்ல.........

நன்றி 
உதய்ஸ்ரீ                                                    

1 comment: