21/9/18
கவிதை - உதய்ஸ்ரீ
அதிவீர சக்தியவன்
அகிலத்தை ஆண்டிடுவான்
பராக்கிரம சாலியவன்
பாசத்தில் பணித்திடுவான்
வீரியத்தில் வித்தகனவன்
வியங்கொண்டால் வீழ்த்திடுவான்
கோபுரத்து கோட்டையவன்
கோலவிரலுக்கோ கோமாளியவன்
கொஞ்சுவதில் பொய்கையவன்
கோமதிக்கோ கணவனவன்
ஆகாயத்து கூடவன்
குறிஞ்சிக்கோ வேலியவன்
தாய்க்கோ பிள்ளையவன்
தாரத்துக்கோ தலைவனவன்
சொந்தத்துக்கோ தூண் அவன்
சோர்ந்து விட்டால் பச்சிளம் குழந்தையவன்
விழிப்போரில் தோற்றிடுவான்
வில்போரில் வென்றிடுவான்
சலிக்காது உழைத்திடுவான்
சலனப்பட்டால் சரிந்திடுவான்
சமூகத்தின் கவசம் அவன்
சந்தனத்தின் வாசமவன்
பெண்மையின் நாதமவன்
தோழனுக்கோ தோள்லவன்
சிவனின் தோன்றலவன்
கொடியிடைக்கோ கூத்தனவன்
மதுரைக்கோ மணிமண்டபமவன்
மார்புடை மன்னனவன்
மதுவுக்கோ மலைப்பாம்பு அவன்
மையிட்டு கண்ணுக்கோ காமனவன்
குடும்பத்தின் அச்சாணியவன்
ஆலமரத்தின் வேர் அவன்
அடக்கி ஆள்வதில் ஆகாயமவன்
சதுரங்க ஆட்டத்தின் புள்ளியவன்
மகளுக்கோ வள்ளள்ளவன்
எல்லோரையும் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் ஆண் அவன்...
நன்றி
உதய்ஸ்ரீ