கவிதை- உதய்ஸ்ரீ
சிறுதுளிபனியென்மேல் படர்குளிர் உணரும்முன்னே
வியந்தகு சூரியன்னுன்னை, வியங்கொண்டே அழைத்ததும்மேனோ,
பனி நனை புல்தளிர் மேலே, பசும் தழை நுகர்ந்துண்ணும் வண்டு
உன் முகம்தனில் முகம்தனை புதைத்தே சிறுநடை மெல்ல பயிலும்வேளை, சிறுநொடியில் மறைவதும்மேனோ சிறுவண்டு தவிப்பதும் முறையோ,
முதிர்நல்முகசுருக்கத்தோடே, நடை தளர்ந்தன்னமேனியோடும்
சிறுஇடை கட்டிய கச்சை சுருள்முடியுடன் சுருண்டே அசைய
என் நுனிவிரல் உனைத்தொட்டு இரசிக்கும் வேளை
எனைவிட்டு இமையம் செல்ல கானல் நீராய் மறைவதும் முறையோ,
பிறை நல் நெற்றியுடனே உயர்நல் தமிழைக்கொண்டே
பிறைதேய்ந்து இருளும்முன்னே உனைக்கான ஓடியேவருவேன்,
உன் விழிகொள்ளும் இளம்வெயில்போலே,உன் இமை தூஞ்சு முன்னே நானும்,
உன் கருவிழி அசைவில்நாளும் மையல் கொண்டே காதல் துளிர்த்திடுவேனே.
நன்றி
உதய்ஸ்ரீ
No comments:
Post a Comment