Friday, September 14, 2018

த000039 - காதலியின் சிரிப்பு - கவிதை : உதய்ஸ்ரீ


                                                               காதலியின்  சிரிப்பு
கவிதை : உதய்ஸ்ரீ


சிரிப்பில் பலவிதம் உண்டு உன்
சிரிப்பில்மட்டும்தான் கள்ளங்கபடமற்ற
தூய்மை தட்டுப்படுகின்றன, அது எப்படி ?
காந்தள் மலர்கள் தங்கள் இதழ்களை
விரித்தாற்போன்றே உன் சிரிப்பின் மெல்லிய
ஒலி என் காதுகளில் இனிமையை கூட்டுகின்றன,
உடல் அழுக்காறுகளை களைத்தெறியும் நீரின் சல சலப்பு
ஓசைபோல் உன் சிரிப்பின் ஓசை என் மயிரிழைகளை சிலிர்க்க செய்கின்றன,
மூங்கில் காடுகளில் நுழைந்து திரியும் வண்டுகளின்
சிறகுகள் மூங்கிலில் பட்டு தெறித்து சிதறும் ஓசைபோல்
என் மனக்கதவை திணறடிக்கச்செய்யும் உன் சிரிப்பின் ஒலி !
என் காவிய பைங்கிளியே உன் சிரிப்பொலியை என்
இதய பெட்டகத்துள் புதைத்து வைத்துள்ளேன் அவை
என்றும் என்னை விட்டு நீங்காது என்றும் என்னிதய துடிப்பின் ஓசைபோல்....

நன்றி
உதய்ஸ்ரீ

No comments:

Post a Comment