Thursday, October 26, 2017

த00002. எதற்கு ஆறறிவு உனக்கு - உதய்ஸ்ரீ

24/10/17
பிறப்பு : 8.30 இரவு
கதை : உதய்ஸ்ரீ
                                   எதற்கு ஆறறிவு உனக்கு

        குயவன் ஒருவன் தன் இயலாமையை எண்ணி எண்ணி புலம்பிய படியே மண்ணை பிசைவதும் மண்பாண்டம் செய்வதுமாக இருந்தான் அவன் புலம்பலை தாளமுடியாத மண் என்னை அள்ளும் போதும் பிசையும் போதும் ஏன் இப்படி புலம்புகிறாய் என்றது, மண் பேசுவதை கேட்டு சில நொடி அதிர்த்த அவன் பின் தைரியமாக மண்ணிடம் பேச ஆரம்பித்தான், நீ எப்படி பேசும் சக்தி பெற்றாய் என கேட்டான்,உன் புலம்பலை கேட்க முடியாததால் தான், நான் ஒரு கதை சொல்லுகிறேன் கேட்பாயா என்றது, கதையா நான் தயார் என்றான்.
       பிராமணன் ஒருவன் வாழ்ந்தான் அவன் கடவுளிடம் சென்று புலம்பி தீர்ப்பான் ஒருநாள் கடவுளிடம் பக்கத்துக்கு விட்டு காரனுக்கு மூணு புள்ள எனக்கு ஒன்னுகூட இல்லையே என்றான் சில மாதத்தில் அவள் மனைவி இரண்டு பிள்ளைகளை பெற்றால், ஆனாலும் அவன் கடவுளிடம் புலம்புவது நிற்கவில்லை,நானு நடையை நடக்குரா ஏ புள்ளைக்கு ஒத்த வாரண காட்ட துப்பு இல்லையே உனக்கு தினம் பால் அபிஷேகம் எதுக்கு என்றான், சிலநாளில் அவன் மகளுக்கு திருமணம் ஆனது அனால் சில மாதத்தில் கணவனிடம் சண்டை போட்டு திரும்பிவந்தாள், மீண்டும் கடவுளிடம் சென்று ஏ பொண்ணு வாழ்க்கைய இப்படி நாசம் பண்ணிட்டியே நீ என்ன கள்ள என்றான், அது வரை பொறுமையாக இருந்த கடவுள் ஆத்திரம் கொண்டு நீ மண்ணாய் போக என்றார், எனக்கு எதற்கு தண்டனை நான் எந்த தவறும் செய்ய வில்லையே என்றான், உங்களை  படைத்தது போலத்தான் மற்ற உயிர் களையும் படைத்தேன் உயிர்களைவிட உங்களுக்கே அதிக அறிவையும் சுகபோகத்தையும் தந்தேன் அப்படி இருந்தும் அதை பயன்படுத்தி வாழ தெரியாது தினம் என்வாசல் வந்து புலம்புவதற்கா ஆறறிவு தந்தேன் ஈரறிவு பெற்ற உயிர்களும் நான் தந்த வற்றை பெற்று போராடி வாழ்க்கையை சந்தோசமாக வாழ்கின்றன, ஒரு நாள் கூட என்வாசல் வந்து நின்றதில்லை, அப்படி இருக்க உங்களுக்கு எதற்கு ஆறறிவு வாழ்க்கை என்பது போராடி அதனால் கிடைக்கும் இன்ப துன்பகளை எதிர் கோள்வதே ஒழிய யாசகம் பெறுவதல்ல என்றார் இனியாவது வாழ்க்கையை எதிர் கொண்டு வாழபழகு என்று சொல்லி மறைத்தார், என்று கதையை சொல்லி முடித்தது மண். இது வரை கதைக்கேட்ட குயவன் உன்னால் அறிவுபெற்றேன் நீ யார் என்பதை சொல்லுவாயா என்றான், கடவுளால் சாபம் பெற்ற மண் நான்தான் தினம் நீ என்னை மிதித்து பிசைந்து சுட்டு உனக்கு பயன் படுத்தி கொள்கிறாய் ஆனாலும் அதை நான் ஏற்று கொள்கிறேன்  என்றது, அதை கேட்ட அன்று முதல்  அவன் அந்த மண்ணை தினம் தன் நெற்றியில் இட்டு வணங்கி தன்வேலைகளை செய்வதுடன் புலம்புவதையும் நிறுத்தினான்.

நன்றி : உதய்ஸ்ரீ

No comments:

Post a Comment