Thursday, October 26, 2017

த00003. இதை நீ உணர்ந்தாள் - உதய்ஸ்ரீ

25/10/17
9:15 பகல்
கதை : உதய்ஸ்ரீ
                                இதை நீ உணர்ந்தாள்

வியாபாரி ஒருவன் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளை எல்லாம் சந்தையில் விற்று பெற்ற லாப தொகையுடன் விடு திரும்பி கொண்டு இருந்தான் வரும் வழியில் முதியவர் ஒருவர் அவன் அருகே  வந்து ஐயா என்னிடம் பத்து ரூபாய் உள்ளது என்னால் அதை சுமக்க முடியவில்லை இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார், அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் வியாபாரி இந்த பத்து ரூபாய் எனக்கு உதவுமா.. இதோ நான் சம்பாதித்த பணம் ஆயிரத்துக்கும் மேல் என்னிடம் உள்ளது இது எதற்கு நீயே வைத்துக்கொள் என்றான். அதை கேட்ட கிழவன் ஒரு நாள் கண்டிப்பாக உனக்கு இது உதவலாம், உனக்கு இதை எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை சிறிது காலம் இதை நீ வைத்துக்கொள் சில மாதங்கள் கழித்து நானே வந்து திரும்ப பெற்று கொள்கிறேன் இல்லை என்று மறுத்து விடாதே இக் கிழவனுக்கு உதவாயோ என்றார். அதை கேட்ட அவன் சரி இருந்துட்டு போகட்டும் என்று வேண்டுமோ அன்று வந்து வாங்கிக்கொள்  என்று கிழவன் தந்த பணத்தை வாங்கிச்சென்றான். விடு சென்றவன் தான் ஈட்டிய பணம் கொண்டு நிலபுலன்களையும் தன் மனைவியை மகிழ்விக்க ஆடை ஆபரணங்களையும் தன் பிள்ளைகளை மகிழ்விக்க அவர்கள் கேட்ட வற்றையும் வாங்கிதந்து மகிழ்ந்தான், நாட்கள் நகர்ந்தன ஓரிரு காலத்தில் மழை இல்லாமையால் அவனுக்கு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது இருந்த அத்தனை சொத்துக்களையும் இழந்தான் பசி கொடுமை அவனை வாட்டியது  ஒரு வேலைக்கும் உணவு இல்லாமல் தவித்தான், கிழவன் தந்த அந்த பத்துரூபாய் நியாபகம் வர அதை தேடியெடுத்து இன்று ஒரு பொழுது பசியை போக்கி கொள்ளலாம் என்று கடைக்கு கிளம்பி வாசலுக்கு வர வாசலில் கிழவன் நின்றிருந்தான், அவனை பார்த்ததும் கிழவன் ஐயா நான் தந்து சென்ற பத்து ரூபாயை திரும்ப பெறவே வந்தேன் என்றான்.அவர் அப்படி கேட்டதும் அதிர்த்த அவன் ஐயா இன்று இந்த பணம் எனக்கு தேவைப்படுகிறது சில காலம் பொறுத்து தருகிறேன் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றான் உன்னிடம் பல ஆயிரம் இருக்க இது எதற்க்கோ என்றார். ஐயா என் பணத்தை எல்லாவற்றையும் இழந்து விட்டேன் இன்று  என் பசியை போக்க இவை மட்டுமே உள்ளது உங்களை அவமதித்ததற்கு மன்னியுங்கள் என்றான், அவர் தம் அருள் கலந்த புன்னகையால் நீ பெற்ற செல்வத்தை என்ன செய்தாய் என்றார், உண்பதற்கு போக எல்லாவற்றையும் பொன்பொருளிலும், மனைமண்ணிலும், போட்டேன் என்றான். அதைக்கேட்ட கிழவர் புன்னகைத்தவாறே தாம்.. எல்லாம் பெற்றுவிட்டோம் என்று எண்ணி நமக்கு வரும் சிறு நன்மைகளையும் உதாசீனம் செய்வதோடு, கடவுள் நமக்கு எல்லாம் தந்து விட்டார் என்று எண்ணுகிறோம்,கடவுள் கொடுப்பதை அவரே எப்படி திரும்ப பெறுகிறார் என்று யாரும் உற்று நோக்குவது இல்லை, நீ சம்பாதிக்கும் போது பத்து ரூபாய் மட்டுமே தானம் செய்தாய் அந்த பலனையே இன்று நீ வறுமையில் வாடும்போது உதவி தொகையாய் திரும்ப பெருகிறாய் மற்ற அனைத்தும் கொடுப்பது போல் கொடுத்து அவனே திரும்ப பெறுகிறான் என்பதை உணர்ந்தார் மட்டுமே வாழ்வில் மேன்மை கொள்வார் என்று சொல்லி மறைத்தார்.தன் தவறை உணர்த்தியது தெய்வமே  என்று உணர்ந்து மனம்வருத்தி முதியவர்  நின்ற  இடத்தை கண்ணீர்மல்க தொட்டு வணங்கினான், அதன் பின் வானம் மும்மாரி பொழிந்தது மீண்டும்  அவன் வாழ்க்கை செழிக்க தான தர்மங்களையும் அதிகமாக செய்து தன் குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தினான்.

நன்றி : உதய்ஸ்ரீ

No comments:

Post a Comment