27/10/17
2: 35 பகல்
கதை : உதய்ஸ்ரீ
நீ கேட்டதையே தந்தேன்
தன் தந்தை இறந்த பின் தனிமரமாய் நின்ற அன்னான், தம்பி இருவர் மிகவும் துன்புற்றன தெய்வத்திடம் சென்று முறை இட்டு கடும் தவம் செய்தனர் , அவர்கள் முன் தோன்றிய தெய்வம் என்ன வரம் வேண்டும் என்றதும், அன்னான் என்னக்கு ஒரு மூட்டை நிறைய விதை நெல் வேண்டும் அதை கொண்டு நான் என் வாழ்க்கையை மேன்மைகொள்ள செய்வேன் என்றான், தம்பியோ ஆண்டவனே எனக்கு தரமான ஒரு விதை நெல் தந்தாலே போதுமானது என்றான். நீங்கள் கேட்டதையே உங்களுக்கு தந்தேன் என்று சொல்லி மறைந்தார்.
இருவரும் தங்கள் நில்லத்தை உழுது தங்களுக்கு கிடைத்த விதை நெல்லை பயிரிட்டன, சில மாதத்தில் தம்பி விதைத்த நிலத்தில் அவன் விதைத்த ஒரு நெல்லில் இருந்து ஒரு நெற்பயிர் மட்டும் நன்றாக வளர்த்து அதில் ஆயிரம் நெல்மணிகளுக்கு மேல் முளைத்திருந்தன,அதை மீண்டும் நிலத்தில் பயிரிட்டன் எங்கும் பசுமையான நெற்பயிர்கள் தழைத்து பல மூட்டை நெற்பயிர்களை தந்தது, ஆனால் அன்னான் நிலத்தில் விதைத்த விதைகளிலிருந்து ஒரு விதை கூட முளைக்கவில்லை,இன்று முளைத்து விடும் நாளை முளைத்து விடும் என்று பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைத்த அவன் கடும் கோபத்துடன் ஆத்திரம் கொண்டு ஆண்டவனிடம் சென்று முறையிட்டான், ஆண்டவன் அவன் முன் தோன்றி எதற்காக என்னை மீண்டும் அழைத்தாய் என்றார். அதை கேட்ட அன்னான் எதற்கு இந்த ஓரவஞ்சனை நீங்கள் கொடுத்த ஒரு மூட்டை நெல்லும் வீணானவையே அவற்றில் ஒன்று கூட முளைக்க வில்லை,ஒரு நெல்லை பெற்ற அவனோ அமோக விளைச்சல் செய்து ஆனத்தமாய் வாழ்கிறான் இதற்கு பேர் ஓரவஞ்சனை தானே என்றான்,அதற்க்கு ஆண்டவன் நீ கேட்டதை தானே தந்தேன் இப்போது என்னை ஏன் குற்றம் சொல்கிறாய், ஒரு மூட்டை நெல் வேண்டும் என்று கேட்டது குற்றமா சொல் என்றான், அதற்கு ஆண்டவன் நல்ல தரமான நெல்மணிகளின் முட்டை வேண்டும் என்று கேட்டாயா,நீ எதை கேட்டாயோ அதையே தந்தேன் தவறாக கேட்டது உன் குற்றமேஒழிய என்னுடையது இல்லை என்று சொல்லி மறைத்தார். தவறாக கேட்டது நம் குற்றமே என்றுணர்த்து வீடு திரும்பினான் வேதனையுடன்.
இப்படித்தான் நிறைய பேர் தவறாக வேண்டிவிட்டு கிடைத்த பின் வருந்துகின்றோம்.
நன்றி : உதய்ஸ்ரீ
No comments:
Post a Comment