Udhaisri Kavidhaigal

Sunday, November 26, 2017

த000020 - ஓரடியான் - கவிதை -உதய்ஸ்ரீ

12/8/14
2: மதியம் 
கவிதை -உதய்ஸ்ரீ 

                                         
                                                    ஓரடியான் 

புத்தகம் : மற்றவருக்கே  பயன்படும் சுயநலமற்ற  பொது தொண்டன்

நாற்காலி :  பேதம்மின்றி மற்றவரை சுமக்கும் சுமைதாங்கி

மழை       :  வரியவனுக்கும் உதவிடும் உத்தமன்

முகத்திரை   :  உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் மாயவலை

காதல்       :  எதிரியையும் அன்பால் வளைத்திடும் உயர்நிலை

எழுத்தாணி :  மற்றவரின் மனநிலையை வெளிப்படுத்த உதவும் விறல் கோல்

வார்த்தை :  நினைத்தால் உயிரையும் கொல்லும் சொற்க்கூட்டம்

கண்ணாடி  :  உருவத்தை மட்டும் பார்க்க உதவும் மதியற்ற பொருள்

கடல் நீர்  :   செல்வந்தர் போல் அடுத்தவருக்கு உதவாது

இறப்பு   :  நீ செய்த புண்ணியத்தால் நீ பெரும் பதவி

பிறப்பு  :   நீ செய்த பாவத்தை கழித்துக்கொள்ள கிடைக்கும் தக்க தருணம்

தாய்  :   உன் உடலை சுமக்க தன் உடலை வருத்திக்கொள்ளும் தெய்வத்தின்                       எதிர்ரொளி

தந்தை :  தன் குடும்பத்தை வழிநடத்தி செல்லும் நல்ல மெய்ப்பாளன்

பூமி  :   நீ இறந்த பின்னும் உன் உடலை சுமக்கும் உன்னத தாய்

நண்பன்  :   அவனின்றி ஓர் அணுவும் அசையாது

மறுஜென்மம்  :  முகமறியா பனி மூட்டம்

கைபேசி  :  மனிதனை தொற்றிக்கொண்ட தொழுநோய்

கடிதம்  :  மறைத்து போன மகான்

தண்ணீர்  : பிரியாத உறவு

கல்லறை : பேதமின்றி வாழும் அதிசய உலகம்

இரத்தம் :  அதினிலும் பிரிவினை வைத்த கடவுள்

ஏழ்மை  :  அமைதியாய் வாழ கடவுள் தந்த சிறந்த நிலை

உயர்பதவி :  முள்மேல் படுக்கை

முத்தம் :  உணர்வுகளின் வெளிப்பாடு

பைத்தியம் : தேவைகள் அதிகரிக்க ஏற்பட்ட மந்த நிலை

கடவுள் :  கண்ணுக்கு தெரியாத அணு சக்தி

மனம் :   தான் என்னுவதை வெளிப்படுத்த தெரியாத ஊமை

இளமை :  பூத்து சில மணியில் உதிர்த்திடும் புது மலர்

மதுபானம் :  மந்திரவாதியின் கைகோள்

குழந்தையின் சிரிப்பு :  கடவுள் வாழும் கோவில்

காசு :  ஆள் விட்டு ஆள் மாறும் நிலையற்றவன்

விதி :  நிலையானவற்றையும் நிலைகுழைய செய்யும் மாய நிலை

கணினி  : உலகத்தை தன் வயப்படுத்திய மந்திர கண்ணாடி

மரம் :  மற்றவருக்கு நிழல் தந்து தான் சருகாகும் தன்னிகரற்றவன்

பறவை :  ஒற்றுமையை கற்பிக்கும் அற்புத படைப்பு

நிலவு :  தான் கடனாக பெற்றதையும் மற்றவருக்கு தந்திடும் கர்ணன்

சூரியன் :  சுட்டெரிக்கும் சுடரொளி

இரவு :  ஓய்வெடுக்க உதவிடும் தருணம்

இரவு விடுதி :  குள்ள நரிகள் கூத்தாடும் பொது கூட்டம்

நன்றி 
உதய்ஸ்ரீ 

2 comments: