Udhaisri Kavidhaigal

Monday, June 15, 2026

கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 

                                 கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 


           கள்வெறி கொள்ளுதடா உந்தன் கட்டழகு  கவிதை கண்டு,

          பித்தானாகி  அலைகின்றேனே  என்னை பிரிந்தே நீ எங்கு சென்றாய்,

          பட்டங்கள் பல படித்தும் நீயேன் பட்டினியாய் கிடந்தாய்,

          சட்டங்கள் ஆழுவதற்கு உன்போல் ஜகத்தினில் யாரும் இல்லை,

         உன்னை நினைக்கையிலே என்னெஞ்சு வேகுதடா,

         ஊரார் உன்னை புகழ்ந்தால் என்னெஞ்சு பெருமிதம் கொள்ளுதடா,

        காத்து கிடக்கின்றேன் நித்தம் காதலால் தேய்கிறேன்

        மாற்றும் மனம்மின்றி உன்மேல் மதிகெட்டு அழைக்கின்றேன்

       உன் கவிதை வாழும் வரை என் காதலும் அதனுடனே பயணிக்கும்,

     என் ஜீவன் உள்ள வரை என் கவிதைகளும் உன்னுடனே பயணிக்கும்.  

Wednesday, June 3, 2026

கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ

 

                                         கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ 

 


கவிதைக்கு இருப்பா !

அவன் : உன் கவிதை பூக்களை அப்படியே வைத்து விடாதே, அவை வாடி விட போகிறது என்றான் அவளிடம். 

அவள் : அவளோ  அவை வாடும் பூக்கள் இல்லை,  வாழும் பூக்கள்  என்றாள். 

கவிதைக்கு இறப்பேது !

அவன் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  கவிதை பூக்களாய் மலர கண்டேன் அது எப்படி? என்றான்.

அவள் : கவிதை பூக்கள், வார்த்தை ஜாலங்களை தன்னகத்தே கொண்டதல்லவா எனவேதான் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது ! 

அவன் :பாறையில் பூ மலரும் என்பதை அறிவேன் உணர்வுகள் கவிதை பூவாய் மலருமா ?அது எப்படி என்றான்.

அவள் : உள் உணர்வுகளை, கற்பனை என்னும் கவிதையால் தட்டி எழுப்பும், அதுவே காதல் என்னும் கவிதை பூக்கள் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது !

அவன் : என் அறிவுக்கு வித்திட்ட வித்தகியே நீ விதைக்கும் விதை மட்டும் எப்படி கவிதை பூக்களாய்  மலர் கின்றன ! என்றான்.

அவள்:  ஒரு விதை விதைத்தால் ஆயிரம் மலர்கள் மலர்வது இல்லையா ! கற்பனைக்கு எல்லை ஏது, ஆகாயத்துக்கு முடிவேது,  கவிதைக்கு வரம்பேது, காதலுக்கு நிறம் மேது, என்றாள் அவள். 

கவிதைக்கு இறப்பேது !

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ

 

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ


மலரே நீ தான் எத்தனை எத்தனை அழகு உன்னை கண்டு காதல் வயப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேரோ

அவர்களில் உன்னுடைய மனதை கொள்ளை கொண்டவர்கள் எத்தனை பேரோ, 

நீ உன்னுடைய ஆடைகளை உதிர்த்து மண் மீது புரள விடும் போதும் அழகு,

வெயிலில் காய்ந்து சருகுகளாய் மண்ணில் உதிரும் போதும் அழகு ,

காற்றில் சல சல வென்று மண்ணில் புரண்டு ஓடும் போதும் அழகு,

மழையில் நனைந்து இதழ்கள் விரியும் போதும் அழகு ,

மண்ணில் புதைந்து மக்கி உரமாகும் போதோ நீ பேரழகு ,   

பெண்களின் விறல் இடுக்குகளில் சிக்கி திணறி நாரில் இழுபட்டு

வலித்தாலும் சிரித்த முகத்துடனே வளைந்து நெளிந்து 

மாலையாய் மாறும்போதோ நீ அழகோ அழகு , 

கடவுளின் கழுத்தில் மாலையாய் நீ புரளும் போதோ

பார்க்கும் பக்தர்கள் கண்களுக்கு எல்லாம் அது ஓர் ஆனந்த அழகு , 

உன்னை கூந்தலில் அள்ளி முடித்த மனையாளை அள்ளி அணைக்க

அத்துடன் உன்னையும் சேர்த்தே அள்ளி அணைத்து - உன்

உணுச்சி முகர்ந்து அவள் உச்சம் தொட எங்கும் - உன் பேரழகு,

Monday, June 1, 2026

உ : வரிசை : உண்மை ஊமையாய் இங்கே : கவிதை : உதய்ஸ்ரீ

 

 

பிறந்த நேரம் : 6.30   

  கவிதை : உதய்ஸ்ரீ                         : வரிசைஉண்மை ஊமையாய் இங்கே :

 


உலை தீயில் உருகி உருகி

உலை தீயும் உருகுதடா

உத்தமன் தான் எங்கு சென்றான்

உண்மை எங்கோ மறைத்ததடா

உற்பத்தி பெருகியதடா

உற்று பார்க்க மறந்ததடா

உற்றார் பெற்றார் - என்ற

உறவுகளும் போனதடா 

உலகம் இன்னும் ஏனோ சுழலுதட

உண்மை ஊமையாய் இங்கே