Udhaisri Kavidhaigal

Wednesday, June 3, 2026

கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ

 

                                         கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ 

 


கவிதைக்கு இருப்பா !

அவன் : உன் கவிதை பூக்களை அப்படியே வைத்து விடாதே, அவை வாடி விட போகிறது என்றான் அவளிடம். 

அவள் : அவளோ  அவை வாடும் பூக்கள் இல்லை,  வாழும் பூக்கள்  என்றாள். 

கவிதைக்கு இறப்பேது !

அவன் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  கவிதை பூக்களாய் மலர கண்டேன் அது எப்படி? என்றான்.

அவள் : கவிதை பூக்கள், வார்த்தை ஜாலங்களை தன்னகத்தே கொண்டதல்லவா எனவேதான் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது ! 

அவன் :பாறையில் பூ மலரும் என்பதை அறிவேன் உணர்வுகள் கவிதை பூவாய் மலருமா ?அது எப்படி என்றான்.

அவள் : உள் உணர்வுகளை, கற்பனை என்னும் கவிதையால் தட்டி எழுப்பும், அதுவே காதல் என்னும் கவிதை பூக்கள் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது !

அவன் : என் அறிவுக்கு வித்திட்ட வித்தகியே நீ விதைக்கும் விதை மட்டும் எப்படி கவிதை பூக்களாய்  மலர் கின்றன ! என்றான்.

அவள்:  ஒரு விதை விதைத்தால் ஆயிரம் மலர்கள் மலர்வது இல்லையா ! கற்பனைக்கு எல்லை ஏது, ஆகாயத்துக்கு முடிவேது,  கவிதைக்கு வரம்பேது, காதலுக்கு நிறம் மேது, என்றாள் அவள். 

கவிதைக்கு இறப்பேது !

No comments:

Post a Comment