Udhaisri Kavidhaigal

Monday, August 31, 2026

தலைப்பு இல்லா - தலைக்கனம் : நேபாள் - கவிதை : உதய்ஸ்ரீ

 

 

                                                    தலைப்பு இல்லா - தலைக்கனம்  : 

                                                                   நேபாள்

கவிதை : உதய்ஸ்ரீ 

 


என் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்துடனு சரியா, என்று தன்னுடைய ஆனந்த கனவை சுமந்தே ஊரெல்லாம் தன் கல்யாண பத்திரிகையை தந்து சுற்றம் நட்பை ஒருவன் அழைத்து வர,

கடவுளே நிறை மாத கர்ப்பிணி ஏ புள்ள நல்ல படியா தாய்யு புள்ளையு இருக்கானு என்று கடவுளின் முன் நின்று வேண்டி சென்ற பெண்மணி ஒருபுறம் நடந்து செல்ல ,

நீண்ட கொம்புகளை தரையில் ஊன்றியே ஆனந்த தாண்டவமாம் ஆனந்த ஈசனை ஆகாய மேனியனை கண்டா ஆனந்தத்துடன் மலை இறங்கும் சுற்றுலா பயணிகள் ஒரு புறம் நடந்து செல்ல ,

பகல் என்றும் பாராது தன்னுடைய புது மனைவியை கட்டி அணைத்தே ஆனந்த இன்பத்தில் திளைத்து இருக்கும் இருபத்தி ஆறு வயது நிரம்பியா ஆண் மகன் மயங்கி இன்புற ,

ஊர்விட்டு வெளிஊர் செல்பவரும் வெளிஊரில் இருந்து உள்ளூர் வருபவரும்மாக பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்ய ,

நேத்து எல்லா நல்லா தானையா சாப்பிட்ட இன்னைக்கு என்ன நட்டாத்துல விட்டுட்டு போவியான்னு தன்னுடைய மார்பில் அடித்து அழுது தீர்த்த அறுபது வயது நிரம்பியா தாய்யின் அழுகுரல் எங்கும் ஒலிக்க,

சிக்கிறோ வா யாராச்சு பாத்துடா போறாங்கன்னு தன்னுடைய காதலியின் கைகளை இருக்க பிடித்தே ஊரை விட்டே ஓடி கொண்டு இருக்கும் காதல் ஜோடிகள் ஒரு புறம் இருக்க,

ஆகாயத்தில் பட்டம் விட்டே ஆனந்தமாய் ஏய் ஏய் என்று ரீங்காரமாய் குரல் எழுப்பியே சின்னாஜ்சிறுவர்கள் மொட்டைமாடியில் விளையாடி மகிழ,

நாலு காசு குறைச்சி குடுத்தா என்ன குறைஞ்ச போய்டுவா கத்திரிக்கவா என்னமோ குதிரை வேல சொல்லுற என்றே காய் காரனிடம் பேரம் பேசி கால் கிலோ போடு என்றே சொல்லி மூணு முணுத்த படியே வாங்கி செல்லும் பெண்மணி ஒருபுறம் போக,

தூங்குடா கண்ணா அம்மா வேல பாக்கணுள்ள என்று தொட்டிலில் தன்னுடைய குழந்தையை கிடத்தி தாலாட்டி தூங்க வைக்கும் அழகிய தாயின் புன்முற்றுவாள் ஒருபுறம் மலர ,

குடுத்த காச திருப்பி குடுக்க வக்கில்லா நீ எல்லா எதுக்கு உசுரோட இருக்கானு தன்னுடைய உமிழ்நீரை தரையில் துப்பிவிட்டே ஒருவன் செல்ல அவன் கூறிய வார்த்தையில் நிலைகுலைந்து நா எல்லா எதுக்கு உசுரோட இருக்க எனக்கு சாவு வாராதான்னு தன்னை தானே நொந்து கொள்ளும் குடும்பம் ஒருபுறம் இருக்க,

புருசனோட இருக்கும் பொது சொகமாலா இருந்துச்சி இப்போ இந்த வழிய கூட தாங்கிக்க முடியாம இந்த கத்து கத்துற மூச்சா நல்லா இழுத்து விடு அஞ்சி நிமிசத்துல உ புள்ள பொறந்துடுவா, ம்ம் ,என்றே பிரசவ வழியில் துடிக்கும் பெண்ணை எட் நர்ஸ் கத்த,

ஊர் எல்லையில் காவல் செய்யும் இராணுவ வீரர்கள் இதற்கும் அதற்குமாய் நடக்க

டேய் ஒடுங்க டா ஒடுங்கடா என்ற குரல் எங்கிருந்தோ ஒலிக்க ஒருசில நொடியில் தின்று தீர்த்தது அத்துணை பெரையும் பெருவெள்ளம் நேபாளத்தில் .

கனவுகளை அள்ளிச்சென்ற கருணையற்ற கட்டுக்கடங்கா ஆறு, உணர்வுகளை உருகுலைத்த பெருவெள்ளம், இதன் தலைக்கனத்தால் தலைப்பு இன்றி மண்ணில் புதையுண்ட நேபாள் .

No comments:

Post a Comment