Saturday, November 24, 2018

த000044 -உயிர் தின்னும் உமிழ் நீர் - கவிதை : உதய்ஸ்ரீ

                                                உயிர் தின்னும் உமிழ் நீர் 

கவிதை : உதய்ஸ்ரீ 

அவன் நினைவுகளை நான் சுமக்கும் ஒவ்வொரு தருணங்களும் சுகமானதருணங்களே.............

சூடுபறக்கும் சுடுமணலில் பட்ட கால்கள் பொரிந்தாலும் விலகாத மனத்துடனே, இருக்கை ஒன்றிணைத்து நடைதப்பா உணர்வுடனே நடந்த மணல்பரப்பில் சூறாவளியில் சூறையாடிய படகின் உதிரிபாகங்கள் சிந்தியும் சிதறியும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் மண்புதைந்து விழிபிதுங்கி கசிந்து கயல்தொங்கி ஒருவாட்டாய் கூன்குப்பி மண்கவ்வி  குடைசாய்ந்து சலனமில்லாதிருக்க ,அதில்
ஒட்டி உறவாட என் ஒற்றை முதுகு தண்டினை  சாய்த்தே , அவன் தந்த சுவாச சூட்டில்   வேர்த்தரும்பி  வழிந்தோடும் வேர்வைகளை தன்னோடிணைத்து  கொண்டு சென்றது எங்கோ.....காற்று !...

அவன் மேல் சட்டை  பொத்தானும் என் விரலோடு  பேசிப்பழக, கட்டிவைத்த கூந்தலும் கட்டவிழ்த்து ஆட்டம் போடா இடைவிடா இடைதனில் அவன் மேய்த்தழுவி உயிர்த்தின்னும் உமிழ்நீர் உள்சென்று பசியாத்தும் அத்தருணம் சுகமான தருணங்களே,

அந்தாதி பாடும் அயலானின் மொழிபோல செவிகொடாது மடல் சாயாது
மது உண்டு தலைக்கேறியே சுருண்டு சுருள் முட்டி வெளிவராது துளிர்க்கும் உயிர்நாடியின்  சிறுமுத்து சிதையுண்டு உயிர்துடிக்கும் நரம்புகள், பரல்களாய் ஓசையெழுப்பும் அத்தருணம் சுகமானதருணங்களே,

கரையான் விட்டு சென்ற கறைபடாதா கட்டுமரத்தில் ஓடி விளையாடி ஒன்றிரண்டை விட்டுச்சென்ற மூஞ்சுறுவின் நாற்றம் எடுக்கும் தின்பண்டமாம் அயிலையின் செதில்களை போருக்கு அணிவகுத்து செல்லும் ராணுவத்தின் படைபோல் ஊர்ந்து சென்று பாய்மரத்தின் அடியில் புதைக்கும் எறும்பு சாரைகளின் ஓசைபோலே வார்த்தைகளை உள்புதைத்தே உயிர்த்தின்னும் உமிழ்நீரின் ஓசைகள் அலைகளோடு பின்னிப்பினையும்  அத்தருணம் என்றும் சுகமானதருணங்களே.

நன்று 

உதய்ஸ்ரீ 

Thursday, October 4, 2018

த000043 -கவிதையும் விடுகதையும் - உதய்ஸ்ரீ

                                          கவிதையும் விடுகதையும்

கவிதை - உதய்ஸ்ரீ 


விடுகதை :1
சிறியன, பெரியன என்று வகுத்து பிரித்து
பார்க்க முடிந்த உன்னால் -உன்
உடலின் துவாரங்களை அடைக்கமுடியாமல்
போனதின் நிலையென்ன, பெண்களின் கைகள்
பட்டு காதல் என்னும் மாயையால் ஏற்ப்பட்ட
துவாரங்களோ இவைகள்.!
( இவன் யாரென்று அறிந்தால் நீ சொல்லு இல்லையேல் தள்ளிநில்லு )

விடுகதை : 2

காதல் என்னும் அலைகள் நித்தம்
தன் அன்பைகாட்டி அழைத்தும்
உன் உடலழகை நனைத்தும் - உன்னை
உரசிசென்ற பின்னும் மதி மயங்காமல்
நண்டுகளுக்கு வீடாய் மனிதர்களுக்கு
திடலாய் பிள்ளைகளுக்கு பூங்காவாய்
விற்பனைக்கு சந்தையாய் அழகுடன்
என்றும் இளமையுடன் காட்சி அளிக்கும்
இவள் யார் ?
( இவள் யார் என தெரிஞ்சா நீ சொல்லு இல்லையேல் தள்ளி நில்லு )

நன்றி 
உதய்ஸ்ரீ

Monday, October 1, 2018

த000042- க ச ப -

கவிதை -உதய்ஸ்ரீ
                                                                 
க :
கற்றவன் எல்லாம் கண்டபடி
கரகாட்டம் ஆடியே செல்கின்றான்
கற்றது எதற்கு என்று எண்ணிவிட்டால்
கல்லாமை என்பதே மறைந்து விடும்
கற்பதை உணர்ந்து வாழ்ந்துவிட்டால்
கஷ்டங்கள் நீங்கியே வளர்ந்திடலாம்
கற்பதையென்றும் மறவாதே - உன்
கடமையை செய்ய தவறாதே .

ச :
சல்லடை போட்டே தேடிவிட்டேன்
சமரசம் எங்கேபோனதப்பா
சட்டங்களை போட்டுவிட்டு
சட்டங்களை உடைக்கும் மனிதரப்பா
சாக்கடை எங்கும் ஆறுபோலே
சந்தனமாக வீசுதப்பா
சட்டத்தை ஆளுபவர் எங்கு சென்றார்
சமத்துவம் இதில்தான் தெரிகிறதோ

ப :

பணம் பணம் என்று
பட்டாய் பறக்கும் மக்களப்பா
பணம் உன்னை ஆளுகையில்
பண்பையும்  நீயே பறக்கவிட்டாய்
பாரதம் என்று முழங்கிவிட்டு
பட்டையை போட்டு படுத்து விட்டாய்
பகுத்தறிவையெல்லாம் மூடிவிட்டு
பள்ளிகளைமட்டும் திறந்து வைத்தாய்
பம்பரமாய் நீயும் சுற்றி சுற்றி
பட்டினியாகவே  படுத்து விட்டாய்
பணத்தை பார்த்த பிணம்போல்
பல்லை இளித்தே படுத்திடுவாய்

நன்றி
உதய்ஸ்ரீ

Friday, September 21, 2018

த000041- ஆண் - கவிதை - உதய்ஸ்ரீ

                                                                      ஆண்
21/9/18
கவிதை - உதய்ஸ்ரீ 

அதிவீர சக்தியவன்
அகிலத்தை ஆண்டிடுவான்
பராக்கிரம சாலியவன்
பாசத்தில் பணித்திடுவான்
வீரியத்தில் வித்தகனவன்
வியங்கொண்டால் வீழ்த்திடுவான்

கோபுரத்து கோட்டையவன்
கோலவிரலுக்கோ கோமாளியவன்
கொஞ்சுவதில் பொய்கையவன்
கோமதிக்கோ கணவனவன்
ஆகாயத்து கூடவன்
குறிஞ்சிக்கோ வேலியவன்

தாய்க்கோ பிள்ளையவன்
தாரத்துக்கோ தலைவனவன்
சொந்தத்துக்கோ தூண் அவன்
சோர்ந்து விட்டால் பச்சிளம் குழந்தையவன்
விழிப்போரில் தோற்றிடுவான்
வில்போரில் வென்றிடுவான்

சலிக்காது உழைத்திடுவான்
சலனப்பட்டால் சரிந்திடுவான்
சமூகத்தின் கவசம் அவன்
சந்தனத்தின் வாசமவன்
பெண்மையின் நாதமவன்
தோழனுக்கோ தோள்லவன்

சிவனின் தோன்றலவன்
கொடியிடைக்கோ கூத்தனவன்
மதுரைக்கோ மணிமண்டபமவன்
மார்புடை மன்னனவன்
மதுவுக்கோ மலைப்பாம்பு அவன்
மையிட்டு கண்ணுக்கோ காமனவன்

குடும்பத்தின்  அச்சாணியவன்
ஆலமரத்தின் வேர் அவன்
அடக்கி ஆள்வதில் ஆகாயமவன்
சதுரங்க ஆட்டத்தின் புள்ளியவன்
மகளுக்கோ வள்ளள்ளவன்
எல்லோரையும் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் ஆண் அவன்...

நன்றி 
உதய்ஸ்ரீ 

Tuesday, September 18, 2018

த000040 - எனைவிட்டு செல்லும் பனியே -கவிதை- உதய்ஸ்ரீ

                                           எனைவிட்டு செல்லும் பனியே

கவிதை- உதய்ஸ்ரீ 

சிறுதுளிபனியென்மேல் படர்குளிர் உணரும்முன்னே
வியந்தகு சூரியன்னுன்னை, வியங்கொண்டே அழைத்ததும்மேனோ,

பனி நனை புல்தளிர் மேலே, பசும் தழை நுகர்ந்துண்ணும் வண்டு
உன் முகம்தனில் முகம்தனை புதைத்தே சிறுநடை மெல்ல பயிலும்வேளை, சிறுநொடியில் மறைவதும்மேனோ சிறுவண்டு தவிப்பதும் முறையோ,

முதிர்நல்முகசுருக்கத்தோடே, நடை தளர்ந்தன்னமேனியோடும்
சிறுஇடை கட்டிய கச்சை சுருள்முடியுடன் சுருண்டே அசைய
என் நுனிவிரல் உனைத்தொட்டு இரசிக்கும் வேளை
எனைவிட்டு இமையம் செல்ல கானல் நீராய்  மறைவதும் முறையோ,

பிறை நல் நெற்றியுடனே உயர்நல் தமிழைக்கொண்டே
பிறைதேய்ந்து இருளும்முன்னே  உனைக்கான ஓடியேவருவேன்,
உன் விழிகொள்ளும் இளம்வெயில்போலே,உன் இமை தூஞ்சு முன்னே நானும்,
உன் கருவிழி அசைவில்நாளும்   மையல் கொண்டே காதல்  துளிர்த்திடுவேனே.

நன்றி 

உதய்ஸ்ரீ 

Friday, September 14, 2018

த000039 - காதலியின் சிரிப்பு - கவிதை : உதய்ஸ்ரீ


                                                               காதலியின்  சிரிப்பு
கவிதை : உதய்ஸ்ரீ


சிரிப்பில் பலவிதம் உண்டு உன்
சிரிப்பில்மட்டும்தான் கள்ளங்கபடமற்ற
தூய்மை தட்டுப்படுகின்றன, அது எப்படி ?
காந்தள் மலர்கள் தங்கள் இதழ்களை
விரித்தாற்போன்றே உன் சிரிப்பின் மெல்லிய
ஒலி என் காதுகளில் இனிமையை கூட்டுகின்றன,
உடல் அழுக்காறுகளை களைத்தெறியும் நீரின் சல சலப்பு
ஓசைபோல் உன் சிரிப்பின் ஓசை என் மயிரிழைகளை சிலிர்க்க செய்கின்றன,
மூங்கில் காடுகளில் நுழைந்து திரியும் வண்டுகளின்
சிறகுகள் மூங்கிலில் பட்டு தெறித்து சிதறும் ஓசைபோல்
என் மனக்கதவை திணறடிக்கச்செய்யும் உன் சிரிப்பின் ஒலி !
என் காவிய பைங்கிளியே உன் சிரிப்பொலியை என்
இதய பெட்டகத்துள் புதைத்து வைத்துள்ளேன் அவை
என்றும் என்னை விட்டு நீங்காது என்றும் என்னிதய துடிப்பின் ஓசைபோல்....

நன்றி
உதய்ஸ்ரீ

Tuesday, September 11, 2018

த000038- மண் பார்த்த என் விழி -கவிதை : உதய்ஸ்ரீ

                                                 மண்  பார்த்த என் விழி 


கவிதை : உதய்ஸ்ரீ 

வர்ணனை :

வின்  தொட்டுயர்ந்த அழகிய மலை குன்றுகளில் படர்ந்து வளர்ந்த பச்சிளம்தளிர்களை வயிறார உண்டுகளித்து பருத்து வளர்ந்த உயர்தர பசுக்களின் சாணத்தால் நெருப்பூட்டிய
கொல்லனது பலம்பொருந்திய தோளினது வலிமைகொண்டே உலையிலிட்டு உருக்கியே செய்த செம்மைபொருந்திய  கூர் வேலைக்கொண்டே ஆயிரம் யானைகளின் தலைகளை ஒருநொடியில்  வெட்டி சாய்க்கும் மதுரை மாநகரத்து வேந்தனது நெஞ்சிக்கூட்டை நேருக்கு நேர் சந்திக்க முடியாது புறமுதுகிட்டு ஓடும் வேற்றுவனது உறையிலிட்ட வாள்போல் என்கண்கள் உனைக்காண அஞ்சி மண்ணை பார்க்கின்றன.

நன்றி 
உதய்ஸ்ரீ

Friday, September 7, 2018

த000037 - விடுகதை - உதய்ஸ்ரீ

                                விடுகதை
  1.               வண்ணத்தில் பிறப்பது எது ?
  2.               எண்ணத்தில்  பிறப்பது எது ?
  3.               வார்த்தையில் பிறப்பது எது ?
  4.              ஒலியில் பிறப்பது எது ?
  5.             அன்பில் பிறப்பது எது ?
  6.             கருணையில் பிறப்பது எது ?
  7.             கைபட்டால் உடையும் கண்ணாடி எது ?
  8.            பெண்ணுக்கு அழகு எது ?
  9.            முக்காடு போட்டாலும் முகம்மதை காட்டுவான் யார் ?
  10.         ஒருபிடி ஜான் ஆனாலும் அவனின்றி இயங்காது எது ?
  11.             கண்ணுக்கு எட்டாத துரமானாலும் எண்ணத்தில் பிரதிபலிப்பான் யார் ?

                 12        கைகால் இருந்தும் நடமாட தெரியாதவன் மழைவெயிலுக்கு                     ஒதுங்கமாட்டா நட்டவனுக்கு நன்றியுடனே காவல்காப்பன் யார் ?
  13 கைக்குள் அடங்காதவன் விரலுக்குள் அடங்கி போவான் யார் ?
            
                விடை :
  1.                                           ஒலி
  2.                                       ஓவியம்
  3.                                         காதல்
  4.                                         கொடை
  5.                                        நீர் குமிழ்
  6.                                    புன்னகை
  7.                                      நிலவு
  8.                                      கற்பனை
  9.                                   சோளக்காட்டு பொம்மை
  10. .                                   மோதிரம்
  11. .                                 காவியம்
  12. .                                 இதயம்
  13. .                                  நாதம்
  14.                                             நன்றி : உதய்ஸ்ரீ 

Thursday, June 7, 2018

த000036-முதல் இரவு - கவிதை - உதய்ஸ்ரீ

கவிதை - உதய்ஸ்ரீ 
12pm









art by udhaisri (A)Jaya



                                                            முதல் இரவு 

சின்னச்சிறு வயதினிலே சிவாஜியும் பத்மினியும் பால் சொம்புடன்
முதல் இரவின் கதவுதனை அடைத்த படகாட்சிதனை பார்த்ததுண்டு
வளர்ந்த பொழுதினில் ரஜினியும் ராதாவும் பூ பந்து கட்டிலினில் படுத்துக்கிடந்த பட காட்சிதனை கண்டதுண்டு, வளர்ந்த போதுதான்
அறிந்தேன் முதலிரவின் இரகசியத்தை.
தாயின் மடியில் உறங்கிய கண்கள், தந்தையின் தோளில் புதைந்த முகங்கள், முதல் முறையாக கணவனின் மார்பகத்தில் புதைந்தது,
சிலிர்த்த மயிர்களும், சில்லென ஊரும் உமிழ் நீரும், சூடுபறக்கும்
சூடு நீராய் மாறிப்போனது, நம் வீடு அண்டைவீடாய் மாறிப்போக,
அண்டைவீடோ நம் வீடாய் மாறிப்போக,
  என் கட்டிலை யாருக்கும் பங்கிடாத நான், என் உடலையும் பாதியாய்
அவனுக்கு பங்கிட்டு கொடுக்க, வெயிலையும் உள்ளே நுழையவிடாது
போர்த்தி உறங்கும் என் போர்வைக்குள், அவன் முழு உடலையும் நுழைத்துக்கொள்ள இடம் தந்தது, பேச பல இருந்தும், ஒருவார்த்தை பேசாது மௌனத்தை மணமேடையில் கட்டிவிட்டு, விழிப்பாட, விரல் ஆட கட்டில் இசைக்கும் இசைக்கு இரு உடல் சங்கமம்.

நன்றி 

உதய்ஸ்ரீ 

Saturday, May 19, 2018

த000035 - படம் பார்த்து எழுதிய கவிதை - உதய்ஸ்ரீ





14/12/13
1.50 pagal 
 கவிதை /உதய்ஸ்ரீ             
                                        படம் பார்த்து எழுதிய கவிதை 

போகும் பாதையின் வழிகளை மறந்தேன்
கொடியவை எல்லாம் உன் முன் குழந்தையாய் சிரிக்க
கல்லும் பாறைகளும் பஞ்சென உன் பாதம் நோகா
செல்லும் பாதைதனைக்காட்ட,எதிர் வரும் கொடிய
விலங்குகளும் விலகியே ஓட,நிலவின் ஒளி வெண்முத்தை
சொரிய, காற்றும் குளிராய் பனிபோல் பூக்க
இரவும் பகலும் ஒன்றெனகலந்து, காதல் மந்திரம்
நம் காதினுள் ஜெபிக்க, நீ தொட்டவை எல்லாம்
உயிர் பெற்றேழுந்து, உன்னை வணங்கி இமையம் செல்ல,
மரங்கள் எல்லாம் குடையென விரிந்து, நிழல் தர எண்ணி
தன் நிலைமறந்தே மயங்கிக்கிடக்க, காதலியை, அள்ளிதழுவும்
காதலன் போல் அதனிலிருந்து உதிரும் தழைகளை காற்றுவந்து அள்ளிக்கொண்டு செல்ல, தன் முகம் விரிக்கும் தளிர்தாமரையும்
நின் பாத சிகப்பினைக்கண்டு முகம்தனை திருப்ப இக்கானகத்தே
உன்னுடன் நான் நடக்கும் நாட்களைமறந்தே உனை நான்
சுமக்க இச்சென்மம் போதுமோ, உன் தளிர் நுனி விரல் நுனிகளை
என் தோளில் சாய்தே, கானல் நீரை கண்ணால் வென்று,
உன்னை நான் அணைத்தே உயிர் பெற்றிடுவேன்.

நன்றி 
உதய்ஸ்ரீ 

Tuesday, May 8, 2018

த000034- இடையில் நுழைந்தவன் எவன் -கவிதை - உதய்ஸ்ரீ


art by Jaya (A) Udhaisri






6/5/18
1.50 பகல்               
கவிதை - உதய்ஸ்ரீ 
                                         இடையில் நுழைந்தவன் எவன் 

அடுப்படியில் அடுக்கியபடியே தவாவில் வெண்மதியை வார்த்தெடுக்கும் சுருள் முடி சுந்தரி சுணக்கியபடியே சுவைத்தாள் வார்த்தைகளை ,
நெய் வார்த்து அன்பின் தேன்வார்த்து, மொருவலென வார்த்தெடுத்த தோசையை பள பளக்கும் தட்டின் மேல் படரவிட்டு அன்பின் நினைவுகளை வண்ணக்கலவையாய் சட்டென சட்டினியை தோசையுடன் சுவைத்திட தோசையின் அருகில் வைத்து தன் கணவனுக்கு கொண்டு செல்ல  பார்க்கையில் இடுக்கில் நுழைந்தவன் எவனோ ......ஆ ....ஆ .... மா ....மா....எல்லாம் பறக்க அடுக்களை அளக்கலையாய் மாறி போக ,
திடு திடு வென பதறியபடி ஓடி வந்தான் கணவன் .....என்ன என்ன ஆச்சி...
சுந்தரி : அங்க அங்க ஆ ......
கணவன் : என்ன மா என்ன ஆச்சி யாரு
சுந்தரி : கரப்பான் அங்க கரப்பான் பூச்சி ..
கணவன் : அடச்சீ எழுந்தது

நன்றி 
உதய்ஸ்ரீ 

Saturday, May 5, 2018

த000033-அவன் வார்த்தை -அவன் வார்த்தை





18/8/14
11.38 பகல் 
கவிதை : உதய்ஸ்ரீ 
                                 அவன் வார்த்தை 

சாலை வீதியை சல்லடையாய் துளைக்கும் மழை துளிகளை
அள்ளி முகர்ந்திட எண்ணி அருகில் சென்றேன், என்னையும் துளைத்து
விட்டது !
மழைதுளியல்ல ...அவன் வார்த்தைகள் ,
கார்காரன் :- அறிவில்ல ஓரமா போகமாட்டா வந்துட்டா நடுரோட்டுல
                        நீசாக ஏ கார்தா கெடச்சிதா போ அந்த பக்கம்..

                             பாரதியின் வேண்டுதல் 

அன்று :
            கத்தியின்றி இரதம்மின்றி யுத்தம் செய்யும் சக்தியை
            தந்தாய் நீ !
            இன்றும் தா மாகாளி !

                                      எங்கே மறைத்தாய் 

 விண்ணில் மறைந்தாயா விடியற்காலையில் மறைந்தாயா,
வீதியில் மறைந்தாய்யா -இல்லை, புழுதியில் மறைந்தாயா,
பூக்களில் மறைந்தாயா -இல்லை, பூலோகம் சென்றாயா,
பாக்களில் மறைந்தாயா - இல்லை, பைங்கிளியோடு பறந்தாயா ,
சேற்றில் மறைந்தாயா -இல்லை , செந்தாமரையில் பூத்தாயா,
மறைந்த இடத்தை மறக்காமல் நீசொன்னால் மறவாமல்
நான் வருவேன் ,மறுக்காமல் எனைத்தருவேன் .

நன்றி 
உதய்ஸ்ரீ 
படித்து விட்டு மூடிவிடாமல் மற்றவருக்கும் அனுப்பிவைக்கவும் 





Thursday, March 1, 2018

த000032- சிரியா -கவிதை -உதய்ஸ்ரீ

1/3/18
5;10 pm                                                        Image result for image of children playing

                              சிரியா 

சிரியா என்றொன்று சின்ன சிறு நாட்டில்
சின்னச்சிறு குழந்தைகளை அள்ளிக்குவிக்கும் அவலம்,
சிறுதுளியும் பதற்றமின்றி கழிந்திருக்கும் வல்லரசுகள்....
உங்களையும் இப்படி முன்னமே செய்திருந்தால் இன்று
இந்த அவலம்  இருந்திருக்காது போலும்,
பார்க்கமுடியவில்லை இரத்தமும் சதையுமாய் சிதையுண்ட
பாகங்கள் சிதைப்பட்டு சிதறிக்கிடக்கும் சின்ன பின்ன காட்சிகள்.
பத்து திங்கள் சுமந்து கண்விழித்து பார்த்து பார்த்து வளர்த்த அந்த பிஞ்சிலம் தளிர்களின் கதறல் குரல் கேட்கமுடியவில்லை.
மாமிசத்தை தின்று கழிக்கும் இராட்சத கூட்டங்களே உங்கள் வெறியை
போக்கிக்கொள்ள குழந்தைகள்தான் கிடைத்ததா ...
முடியவில்லை எங்கு சென்றிர்கள் எல்லோரும்,
வெள்ளமென பாயும் குழந்தையின் ரத்தத்தில் குளித்தெழும்
நாற்றம் பிடித்த வல்லூறுகளே...
யாரும்  இப்பூமியில் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பது தெரியாத....
ஒன்றை அழித்து ஒன்று வாழவேண்டும் என்பது உலகத்தின் கோட்பாடாக இருக்கலாம்,மனித உயிர் மனிதனை அளிக்கவேண்டும் என்பதில்லையே...
நீங்கள் புரியும் ஆணவ போருக்கு ஏன் குழந்தைகளை பலி கொடுக்கிறீர்கள், செம்மறி ஆட்டு கூட்டங்களே, போதும் உங்கள் ஆட்டம்
இயற்க்கை மரணத்தை விதி என்போம் இதை எதில் சேர்ப்பது
பால் மாடி மறக்கும் முன்னே மண்ணடி புதைத்த அவலம்,
யார் கேட்ப்பது.... ஒரு சிறுவனுக்கு இருக்கு துணிச்சல் கூட யாருக்கும் இல்லாமல் போயிட்ட தா என்ன..
இஸ்லாம் மதம் கற்று கொடுத்த பாடம் இதுதானா....
கர்த்தர் போதித்த மொழிஇதுதானா.....
வாணுயர்த்த சிவ கோத்திரத்தில் பிறந்த மக்கள் என்று மார்தட்டும் நாம்
பொம்மைகளை இருக்கத்தானா...
யாரும் ஒப்பாரி வைக்காதீர்கள் இந்த குழந்தைகளை பார்த்து....
போரில் வீரமரணம் எய்திய தளிர்கள் அவர்கள்...
அவர்களை வானிலிருந்து கோழைகளாய் குண்டிட்டு தகர்த்திய
அநியாய காரர்களை பார்த்து ஒப்பாரி பாடுகள்.
இடுகாட்டில் உங்களை புதைக்க ஆள் இருக்காது என்று.
அவர்களுக்கு மட்டும் கூறவில்லை,
உலகில் பணப்பேய் பிடித்து திரியும் கூட்டத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.
இனியும் உங்களை காப்பாற்ற யேசுவோ, மகான்களோ, பிறக்கபோவது
இல்லை ..
மனித போர்வையின் வேர்வைகளே உங்களை தகர்க்க இத்தனை
குண்டுகள் தேவையில்லை ஆண்டவன் நினைத்தால் ஒருநொடி போதுமே....போதுமே ..........
இதற்குமேல் என்னால் முடியவில்லை என்கண்கள் இரண்டும் கண்ணிற்குளத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டன மன்னிக்கவும்...கடைசியாக ஒன்று சொல்லுகிறேன்,
அடுத்த வீட்டில் தான தீப்பிடித்தது என்று அமைதியாய் இருக்கிறோம்
தீக்கொழுந்து விட்டால் சுற்றமும் பரவும் என்பதை மறந்து விடாதீர்கள்..

நன்றி 
உதய்ஸ்ரீ 

Thursday, February 1, 2018

த000031- மறுமொழி ஏன் ?-கவிதை - உதய்ஸ்ரீ

31/10/14
11:45 பகல் 
கவிதை - உதய்ஸ்ரீ 

Image result for wido images of women in india





                                                                  மறுமொழி ஏன் ?

பெண்  :  காக்கை என்று எண்ணி உன்னை நான் விரட்டவா
                தண்ணீர் என்று எண்ணி அள்ளி தெளிக்கவா
                கயவன் என்று எண்ணி உன்னை திட்டவா
                யாரோ நீ ! இருந்தும் உனக்கு நான் மறுமொழி கூறுகிறேன்
                ஏன் நான் !

ஆண்   :   பூவென்று எண்ணி உன்னை நான் கோர்க்கவா
                  புது மொழி என்று உன்னை அழைக்கவா
                   தாய் என்றெண்ணி  உன் மடி படுக்கவா
                   பருவத்தை தருவாய் என்றெண்ணி கையேந்தவா,

பெண்    :  போவென்று சொல்லியும் போகவில்லை
                  போரதகாலம் உனக்கோ என்றாலும் கேட்கவில்லை
                  ஒழிந்தென்னை பார்க்கும் நீ என்ன பித்தனோ !

ஆண்      : ஆம் ! உன்னை எண்ணி எண்ணி என்
                   மூளைச்சுவடுகளில் எல்லாம் உன் உருவங்கள்
                   செதில்களாய் படிந்து விட்டன அவற்றை எங்கனம் அறுப்பேன்
                   வெட்டினாலும் கசிவது உன் உதிரம் அல்லவோ

பெண்  :     உற்றோரும் பெற்றோரும் மற்றோரும் பார்க்க
                   வீதிவழி கை கோர்த்து நடக்க முடியாத என்னிடத்தில்
                   வீண் வாதம் செய்திடல் எங்கன நியாயம்,
                    அறிந்து அறியாதவன் போல் பிழை செய்தல் முறையோ,
                    வெண்மதியொத்த பூக்களையும் தொடுத்தணியும்
                    அருகதையற்றவளாய், பிய்ந்துபோன நார்கள் ,
                     காய்ந்துபோன சருகாய் வெயில் பட்டு வாடுவதுபோல்
                     என்மனம் தளர்ந்து இருக்கையில் அதில் ஊஞ்சல்
                     கட்ட எண்ணுதல் முறையோ,

ஆண் :        தளர்ந்த நார்களே வழுமிக்கனவாய் இழகிய பூக்களை
                    தன்னுடனே பின்னி பிணைத்து மாலையாய்
                    தெய்வத்துக்கு சூட்டப்படுகின்றன அதை அறிந்தும்
                    அறியாதவளாய் என்னுடன் வாதம் செய்தல் எங்கன நியாயம்

பெண்   :     சொல்வன்மை மிக்கவனே சோற்று வயலை
                    பதம்பார்க்கும் வெள்ளெலி போல்...

ஆண்   :      வேண்டாம் வேண்டாம் - எலி என்று என்னை எண்ணி
                     நகையாதே .....
                     உன் எண்ணங்களில் கொஞ்சிவிளையாடும் ஏர்முக
                     நாயகனும், கரும்புத்தீவுக்கு சொந்தக்காரனும் நானே
                     இனியேனும் நீ எதிர்மொழி கூறாதிருப்பாயோ
                     என்னிருள் போக்கவந்த  இளஞ்சிவப்பே,

                  (  வாயாடி தோற்றவளாய் வரம்பை மீறவும் முடியாது
                      வேருன்றவும் முடியாமல் வீண் பலி சுமக்கவும் முடியாமல்
                      தள்ளாடி நின்ற அவள் தயங்காமல் கூறினாள் )

பெண்  ;      இருள்கவ்வும் ஒளிமுகத்தோனே, காதல் பித்தால்
                     நீ குழைக்கும் சந்தனத்தை பூசும் சிலையல்லனான்
                     கொல்லனது உலையில்  குழைத்தூற்றிய பசும்பொன்னால்
                    ஆனா தீவினம் ,வெட்டியானது உலையில்
                     காயுமேயொழிய உன் விரலில் அல்ல
                     என்றே கண்ணீர்மல்க கூறி ஓடி மறைத்தாள்.
                   

                     
நன்றி 
உதய்ஸ்ரீ

Tuesday, January 30, 2018

த000030 - நிழல் வண்ணம் -வர்ணனை -கவிதை - உதய்ஸ்ரீ

1/12/14
9:15 பகல்                             நிழல் வண்ணம் -வர்ணனை 
கவிதை - உதய்ஸ்ரீ 


art by udhaisri (A) Jaya






வெலேரிய கண்களை உடைய ஓடை
மேகத்தை தன் முதுகில் சுமந்து நிற்பது போல் பெருமிதம் கொள்ளும்
மலை குன்றுகள் , உறங்காத நிலவு ,இருள் படர்ந்த மேகம் ,அமைதியாய்
உலவிடும் காற்றலைகள், முடித்து வைத்த கூந்தலுடனே ஒற்றையடி
பாதையில் சத்தமின்றி நடக்கும் அவள் பாதங்கள்.
ஆந்தையின் கண்ணொளிப்பட்டு தெறித்த அவள் மேனியின் நிழல் படுக்கை சற்றே அவள் பின் நடந்து செல்ல அந்நிழலைக்கண்ட வானமும் அவள் மேல் காதல் கொள்ள,
அவள் நிழல் படுக்கையே இத்தனை எழில் அழகு கொண்டவையெனில் ,
மைகொண்ட கண்களையுடைய அப்பதுமை எத்தனை அழகு மிக்கவளாய் விளங்குவாள் என்று எண்ணிய சேரமாதேவன், சேற்று வயல்லென்றும் பாராமல் வீரமென பாய்ந்தோடும் தன் குதிரையின் லாவகத்தை தன் கையால் பற்றியபடியே வயல்களை எல்லாம் சிதறடித்து செல்லுகையில் தெறித்த அச் சேற்றின் குழம்புகள் உயர்த்த
குன்றுகளின் மேல் பட்டு தெறித்து சிதறிவிழ, அக் குன்றுகளில் வாழும் பறவைகளும் விலங்குகளும் உலகத்தின் முடிவுகாலமோ என்று எண்ணி அங்கும் இங்குமாய் சிதறி ஓட அவைகள் எழுப்பும் குரல் இடி ஓசைபோல் வானத்தை எட்ட அவள் அழகை காண எண்ணி காதலை சுமந்து செல்லும் அவன் காதுகளுக்கு மட்டும் எவையும் கேட்காமல் அவளை காண எண்ணி தன் குதிரையின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி அவள் அழகை காண விரைந்தான்.
                                                     
நன்றி                                                    
உதய்ஸ்ரீ

Friday, January 19, 2018

த000029- ஆறுபடையில் குடியிருக்கும் அற்புத முருகன் -கவிதை - உதய்ஸ்ரீ

      ஆறுபடையில் குடியிருக்கும் அற்புத முருகன்  

கவிதை - உதய்ஸ்ரீ                               






அடர்ந்த காடுகள், அயலாது ஓடும் அருவிகள் அதில் புதைந்து ஓடும் மீன் குட்டிகளை கொத்திச்செல்லும் மீன்கொத்தி பறவைகள், முள்கள் நிறைத்த மூங்கில்கள்,பட்டுப்போல் படர்ந்த புல்வெளிகள், பல்லை இளிக்கும் மந்திகள், சேற்று வயல் நிறைந்த மழை சாரல்கள், பாறையில் முகம் புதைத்து ஓடும் ஓணான்கள், சலசலக்கும் ஓடைகள், சாமந்தி பூவை சுமக்கும் பச்சிளம் தளிர்கள், நிலவுக்குள் புகுந்த கருமைகள், நில்லாது ஓடும் மேகங்கள், சர சர வென சரியும் மணல் திட்டுகள், சரியாது அதில் ஓடும் எருமைகள், கனத்த பால்மாடியை சுமந்து செல்லும் பசு கூட்டங்கள், கனநேரம் ஆனாலும்  மரணமென்று தப்பி  ஓடும் ஆட்டு மந்தைகள்,  பாம்புக்கு போட்டியாய் புற்றேழுப்பும் எறும்பு சாரைகள் அதற்க்கு எல்லாம் இடம் தராது புற்றை மிதித்தோடும் பன்றி கூட்டங்கள், சேற்றில் முளைத்த தாமரைகள், சூரியனை தவிர யாரையும் பார்ப்பதில்லை என்று முகம் திருப்பும் சூரியகாந்தி மலர்கள், இவற்றை எல்லாம் கடந்து மலை உச்சியில் குடியிருக்கும் கந்தக்கோட்டை முருகனின் பேரழகை காண சலியாத மனதுடனே பார்க்க கடந்து   செல்லும் பக்த கோடிகள்.

நன்றி                                     
உதய்ஸ்ரீ 

Thursday, January 11, 2018

த000028 - சென்னை - கவிதை : உதய்ஸ்ரீ

கவிதை : உதய்ஸ்ரீ                                               




                                               18/7/16
                                               5.30                                           




                                                                 சென்னை 




தமிழ் வளர்த்த பிள்ளைகளுள் தலை பிள்ளை சென்னையடா
நெட்டே இவன் வளர்ந்தான் நெடுமுகில் போலவேடா
ஊர்பிள்ளை தான் வளர்த்து உயர்தேதான் நின்றிடுவான்
தன் மொழியின் பெருமைதனை உலகத்துக்கு உணர்த்திடுவான்.

தன் இடை தொட்ட ஆழியுடனே ஆழகாய் சிரித்திடுவான் மெரினாவில்
முந்தி ஓடும் வாகனத்துடனே வளைந்திருப்பான் முகப்பேரில்
தன் மூச்சி விட இடம்மின்றி பூத்திடுவான் டி. நகரில்
வழிந்தோடும் மக்களுடனே வளம் செய்திடுவான் வடபழனியில்

ஒற்றுமையை கற்பிக்க சென்னைக்கு நிகருண்டோ
செந்தமிழில் கவிபாட எம்மையின்றி ஆளுண்டோ
ஆலமரம் போல நாங்க  அனைவரையும்  தாங்கிடுவோம்
அன்புக்கு அடிமனாங்க அன்னம்மிட்டே மகிழ்ந்திடுவோம்

கோவில் குளமுண்டு கூத்துடனே நடனமுண்டு
நல்லிசையுடனே கல்வியுண்டு நற்றமிழ் மாந்தருண்டு
எல்லோருக்கும் உதவிடும் கரங்கள் கோடி இங்குண்டு
அடை மழை வந்தாலும் அதை வெல்லும் துணிவுண்டு

சுட சுட இட்டிலியுண்டு சுவையான பொங்களுண்டு
வடை பாயாசத்துடனே தலை வாழை விருந்துண்டு
அஞ்சுக்கு பத்துக்கு வயிறார உணவுண்டு
வந்தவரை வாழவைக்க போதுமான நிலமுண்டு

சென்ட்ரல் முதல் கொண்டு காசிமேடுத்தொட்டு
போரூர் மேலேறி ஆவடியில் வலம் வருவோம் நாங்கள்
ரிப்பண்பில்டிங் உடனே கோல்டுடென் பீச் உண்டு
பக்தியுடன் நாங்கள் செல்ல பார்த்தசாரதி கோவிலுண்டு

கிண்டி பார்க்குடனே விவேகானந்தர் இல்லமுண்டு
எங்க தமிழ் புலமைய சொல்லிடவே வள்ளுவர் கோட்டம்முண்டு
தாமஸ் மௌண்ட்டுடனே ஆயிரம் விளக்கு மசூதியுண்டு
எங்க பெருமை நாகசொல்ல எங்க கூட சென்னையுண்டு

இவன் வயதோ நானுறு  முப்பாட்ட வெச்ச பேரோ மதுராசு
இவன் செல்ல பேரோ மேட்டராஸ் நாகதா கூப்பிடுவோ சென்னையினு

நன்றி
உதய்ஸ்ரீ




Wednesday, January 10, 2018

த000027 - நனைத்த தலையணை -கவிதை - உதய்ஸ்ரீ



                                       நனைத்த தலையணை 

கவிதை - உதய்ஸ்ரீ ♡♡♡
10/1/2018


♡♡♡







பச்சை வண்ணமாய் பைங்கிளிகள் எங்கும் பறந்தோட
வெண்முத்தை சொரிந்துவிட்டு எங்கோசென்ற சந்திரனும் முகன் மறைக்க
காக்கைகள் எல்லாம்  தன் குஞ்சுடனே கூடு  வந்து இளைப்பாற
ஆந்தையும்  கோட்டானும் கண்ணொளிபெற்றே உற்றுப்பார்க்க
கருமை நிறம் தந்த கொடையவனும் தன் காதலியின் அழகில் முழ்கி கிடக்க
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் நள்ளிரவும் பாராது  மணம் வீச
சாலை வீதியெங்கும் விளக்கொளிகள் தன் ஆடை மாற்ற
அன்னியன் எவனும் வந்து விடுவானோ என்றே கண்ணுறங்காது
காத்துநிற்கும் காவலனது கண்ணும் தோய்ந்து போக
என்னினும் கூர்மை எவரும் உண்டோ என்ற இறுமாப்புடனே
தன் நெஞ்சுரம் நிமிர்த்திநிற்கும் வீரனது வேலும் நிமிர்த்து  நிற்க
நான் மட்டும் என் தொழிலை மறந்து அவன் நினைவால் வாடும் நிலைகண்டு தலையணையில் முகம் புதைத்தே கண்ணீரினால் தலையணை நனைந்தனவே தவிர அவன் இதயமல்ல.........

நன்றி 
உதய்ஸ்ரீ                                                    

Wednesday, January 3, 2018

த000026 - கடவுளின் குரல் - கவிதை - உதய்ஸ்ரீ


 கவிதை - உதய்ஸ்ரீ                                                                  Image result for images of love  

5/2/13
8.00 பகல் 

                                               கடவுளின் குரல்

அது இது எது
என்று புலம்பிடும் மக்கள்
அவன் இவன் உவன்
என்று ஒன்றும்மில்லை
கார் பனி மழை
இவற்றை கடந்தே சென்று
பொன் மண் பெண்
பற்று விட்டிடுமாயின்
தொட்டது நிலைத்திடும்
விட்டிட்டு விலகிடு மனமே

                                             பூமி சிரித்தது 


சூரியன் மறைந்தான் இரவு விழுந்தது
இரவு விழுந்ததால் கனவு பிறந்தது
கனவு பிறந்ததால் காதல் பிறந்தது
காதல் பிறந்ததால் கவிதை விழுந்தது
கவிதை விழுந்ததால் உணர்வு பிறந்தது
உணர்வு பிறந்ததால் உயிர்கள் இணைந்தது
உயிர்கள் இணைந்ததால் மழலை  பிறந்தது
மழலை  பிறந்ததால் பூமி சிரித்தது
பூமி சிரித்ததால் உலகம் வளர்த்தது

                                    பிரிவின் வலி 

காதல் அனுபவம் இல்லை
காதலித்த அனுபவமும் இல்லை
பிரிவின் வலி அறியேன்
காதலின் துடிப்பறியேன்
உன் பாதசுவடுகளை
பார்த்த பின்பே விடிவெள்ளிக்காக
காத்திருக்கும் ஜோதிட வித்தகனானேன்
பிரிவின் வலி நெஞ்சின் வலியைவிட
கொடுமையானது என்பதை உணர்ந்தேன்

நன்றி 

உதய்ஸ்ரீ