Udhaisri Kavidhaigal

Sunday, May 24, 2026

 

                        பெற்ற மகள் கேட்டாள்

                              கவிதை : உதய்ஸ்ரீ


பெற்ற மகளோ என்ன செய்தாய் எனக்கு என்றாள் தாயிடம்

தாயோ அதை பட்டியலிட்டு சொல்ல முடியுமா என்றாள்,

உணவை  உதிரமாக்கி    தந்தேன் ,

தூக்கத்தை விடியலாக்கி  தந்தேன் ,

வலியை உரமாக்கி  தந்தேன்

எனக்கான வற்றை எல்லாம் உனதாக்கி தந்தேன் ,

வேர்வையின் சுமையை என் முதுகில் ஏற்றி,

உன்னை ஒய்யாரமாய் இருக்க செய்தேன்,

 நீ  "வேறொருவனிடம்  “ஆனந்தமாய் கை கோர்த்து செல்ல

வேசியாய் நான் வேடம் தரித்து நின்றேன் 

நீ திருப்பி தருவாய் என்று நான் எதையும் தர வில்லை,

தந்தது போத வில்லையே என்று வெட்கி சாகிறேன்

இன்னும் தர என்னிடம் ஒன்றும் இல்லை என்று என்னும் போதெல்லாம்

மண்ணில் புதையுண்டு தன்னை தானே மாய்த்து கொள்கிறது மனம்

கவிதை : உதய்ஸ்ரீ

 

No comments:

Post a Comment