Udhaisri Kavidhaigal

Friday, May 29, 2026

இந்த நாய்களுக்கு பெயர் "நல்லவன்"

 

                                         இந்த நாய்களுக்கு பெயர் நல்லவன் :

                                                                         கவிதை : உதய்ஸ்ரீ 

 

 





பஸ், ரயில் நிலையம், அலுவலகம், என்று ஆங்காங்கே இந்த இரவு உண்ணிகள்  இருக்கத்தான் செய்கின்றன.

 பொது இடங்களில் பட்ட பகலில் தெருக்களில் முச்சந்தியில் தன் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் தெரு நாய்கள் கூட  தன்னுடன் உறவு கொள்ளும் பெண் நாய்களின் விருப்பம் பெற்றே உறவு கொள்ளும்,

பொது இடங்களில் தன்னுடைய இச்சைகளை தீது கொள்ள என்னும் இந்த கழிவறை புழுக்கள்லாகிய இவர்களை தண்டிப்பது எப்படி, ஒட்டு மொத்த ஆட்டு கூட்டத்தில் இந்த ஆட்டை அடையாளம் கண்டு பிடித்தாலும் இதை காட்டி குடுப்பது எப்படி…

படித்த பட்ட தாரி போல் வேஷம் போட்டு கொண்டு,  மிடுக்கான உடை அணிந்து கொண்டு, உதட்டில் பொய்யான புன்னகையை  தரித்து  கொண்டு, கண்களில் காமத்தை சுமந்து கொண்டு, தன் விரல் நகங்களில்  வெறியை அணிந்து கொண்டு, மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, எல்லோரிடமும் தன்னை நல்லவன் போல் காட்டி கொண்டு நல்லவன் என்று பெயர் எடுக்கும்,

“இந்த நாய்க்கு பெயர் நல்லவன்”

பெண்ணின் உடலை உரசுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிக்கும் இச்சைகள். இல்லை, இல்லை, ஏச்சைகள் என்றே இவர்களை சொல்லுவது சாலா சிறந்தது.

பெண்களின் உடல் அங்கங்களை அவர்களுக்கு தெரியாது என்று எண்ணி கொண்டு அவர்கள் உடலை உரசி, தன்னுடைய உடலை, சூடேற்றி கொள்ளும் நாதாரிகள் சில நல்லவள் வயிற்றிலும் பிறக்கத்தான் செய்கின்றன ! 

No comments:

Post a Comment