Wednesday, November 29, 2017

த000023 - தடிமாடு - கவிதை - உதய்ஸ்ரீ

14/3/14
கவிதை - உதய்ஸ்ரீ 

                                              தடிமாடு 

உயிர் கொண்டு வீற்றிருக்கும் இச் சோலைகளில் தாரகைகளாய் பூத்துக்குலுங்கும் இப் பூங்கோதைகளின் வண்ணமிகு வாசம்தனை முகர்ந்தே நான் செல்ல, அவை இழுக்கும் இழுப்பில் அதனுடனே நான் சென்று சிறுமல்லி பூக்களை அள்ளியே நான் முகர்ந்து கொஞ்சிவிளையாடி மகிழ  எங்கிருந்தோ வந்த தென்றல் எனை அழைத்து சென்றிடவே அவ்வழி செல்லும் ஆற்றின் நீர்படுக்கை என் பாதம் தனை முத்தம்மிட,என்மடிதனில் இளைப்பாறி செல்லாயோ என்று மாமரத்தின் கிளைகள் அசைத்தே எனைப்பார்க்க அவை நிழல் கண்டு மயங்கியே அதன் மடியில் நானும் கண்ணுறங்க விண்ணுலகம் பறந்தேதான் நான்  விழித்திடும் நேரம்தனில் கருமேகம் எனை சூழ சுற்றும் படர்ந்த நிலஒளியில் அவள் முகம் கண்டே நான் மெய்சிலிர்க்க அவள் அருகே செல்ல மனம் துடித்தபோதிலும் செல்லாது அவள் விழிக்கான எண்ணி தடை கொண்டு நிற்கும் இலைதனை விலக்கியே மெல்ல நான் பார்க்க அவள் நிமிர " அரைத்து ஒரு கை.........ஆ !.............

எழுந்திடு எருமமாடே நேரோபோறது தெரியாம இன்னு தூக்கிட்டு கெடக்க தடிமாடு தடிமாடு  எழுந்துரு.........என்று என் அம்மா திட்ட கலைந்தது என் கனவு.


நன்றி 
உதய்ஸ்ரீ 

Tuesday, November 28, 2017

த000022 - அன்றும் இன்றும் என்றும் - கவிதை- உதய்ஸ்ரீ

6/11/14
கவிதை- உதய்ஸ்ரீ 

                               அன்றும் இன்றும் என்றும் 



அமைதியாய் இரு
அழகாய் சிரி
அருமையாய் பேசு
அன்பாய் பழகு

ஆகாயம் போல் உதவு
ஆதாயத்தோடு பழகாதே
ஆனைப்போல் நட
ஆணவத்தோடு நடக்காதே

இன்பமாய் இருக்க
இழிவானவற்றை செய்யாதே
இயன்றவரை சிறிதேனும்
இல்லாதவருக்கு உதவிசெய்

ஈடில்லா இவ்வாழ்க்கையை
ஈனத்தனத்தால் அழித்திடாதே
ஈமக்கடன் போகும்வரை
ஈகையோடு நடந்துக்கொள்

உடல் மண்ணுக்கு
உயிர் விண்ணுக்கு
உடுக்கைபோல் வாழ்வதை விட்டு
உருப்படியாய் யோசி

ஊற்றருவி போலிருந்து
ஊருக்கு வளம் செய்
ஊமத்தம் காயை போல்
ஊமையாய் இருக்காதே

எள்ளல் பேசி வாழாதே
எடுத்த காரியத்தில் உறுதியாய் இரு
எருது போல்  உழைத்து
எறும்பு போல் சேமி

ஏட்டில் படிப்பதை
ஏப்பம் விட்டே போகாதே
ஏன்னென்று கேள்வி எழுப்பும்முன்
ஏன் நடந்தது என்று யோசி

ஐப்பசியில் விதைத்த நெல்
ஐயம் இல்லாமல் அறுவடை செய்யலாம்
ஐயாயிரம் காலமானாலும்
ஐயம்மில்லாமல் நீ வாழலாம்

ஓடையில் நீர் நீரைந்தால்
ஒய்யாரமாய் ஓடம் போகலாம்
ஒருஓட்டை இருந்து விட்டால்
ஓடமும் முழுகிப்போகலாம்

ஓடி ஓடி வாழ்வதை விட்டு
ஓரிடத்தில் வாழப்பார்
ஓயாமல் பேசி பேசி
ஓட்டாண்டியாய் ஆகிவிட்டதே

நன்றி 
உதய்ஸ்ரீ 

Monday, November 27, 2017

த000021 - இப்படி வாழ்ந்தால் - கவிதை - உதய்ஸ்ரீ

18/8/14
2:06 இரவு 
கவிதை - உதய்ஸ்ரீ 

                                     இப்படி வாழ்ந்தால் 


  ஆடும் பொம்மையாய் இருப்பதை விட
  பொம்மலாட்டியாய்  இருப்பது நல்லது.

  நச்சு பாம்பை விட நயவஞ்சகன் கொடுமையானவன்

  நல்லவனாய் நடிப்பதை விட தீயவனாய் இருந்து விடு

  அறிவில் சிறந்தவனாய் இருப்பதைவிட,
  பண்பாளனாய் இருக்க முயற்சி செய்.

  கற்றதை எண்ணி பெருமை கொள்வதை விடுத்து
  கல்லாததை எண்ணி சிறுமை கொள்
 
  அடக்கம் என்பது ஆறறிவு
   அடங்காமை என்பது ஐந்தறிவு.

    சொற்குற்றம் காண்பதை விடுத்து
    சுயசிந்தனையை பெருக்கிக்கொள்

    மண்ணில் வாழ்வதை விட
    மற்றவர் மனதில் வாழ்வதே உயர்வு

    சருகாய் வீழ்வதற்கு முன்
    சந்தனமாய் மனம் வீசு

    காற்றாடி போல் பறக்க எண்ணாதே
    அறுபட்டால் மாட்டிக்கொள்வாய்

    கல்லறையில் தூக்குபவனையெண்ணி
    ஒரு கணம் நீ கண்ணுரங்கு

    நண்பர்களுக்கு உதவியாய் இருப்பதை விட
    உண்மையாய் இரு

    பேசுவதை குறைத்தால்
    மேன்மை பெருகும்

     மற்றவர்களை வாழ்த்துவதை காட்டிலும்
      வீழ்த்தாமை நன்று

      நீ பிறந்ததை எண்ணி பெருமை கொள்வதை விடுத்து
       எதற்காக பிறந்தோம் என்பதனை எண்ணிப்பார்க்க பழகிடு

     தலை நிமிர்த்து வாழ் நீ தமிழன் என்பதில்

     வாடகை மொழிக்கு வட்டி கட்டாதே

     கண்ணீர்ரைகாட்டி எதையும் பெற எண்ணாதே

     சில்லரை போல் சிதறாதே
     நோட்டை போல் அமைதியாய் இரு

     வாழ்ந்தால் ஆல மரம் போல் வாழ்
     வீழ்ந்தால் வாழைமரம் போல் வீழ்

    சேற்றில் கால் வைப்பவனை எண்ணி
    சோற்றில் கை வை

    கொள்ளை அடிப்பவனை விட
    கொலை செய்பவன் மேல்

    தனக்கு நிகரான உயிரினை மதிக்க தெரியாதவன்
    புழுவினும் அற்பமானவன்

   முழம் சறுக்கினாலும்
   ஜான் இருப்பதை எண்ணி எழுந்திரு

   தன்மானத்தை விற்று, வீடு கட்டாதே

  சோம்பேரிகளுக்கு மேலோகத்திலும்
  இடம் இல்லையென்பதை எண்ணிக்கொள்

   தோல்வியை எண்ணி கலங்குவதை விடுத்து
   முயன்றதை எண்ணி பெருமைகொல்

    சாதிக்க முயற்சி செய் ஆனால் அதில் சதியை நுழைக்காதே

    கலப்படம் செய்து காசை எண்ணாதே

   வானை நீ கடந்திட வட்ட நிலவை தூது விடாதே

   அடுத்தவன் உழைப்பில் வாழ்பவனை விட
   ஊனமாய் இருப்பவன் சிறந்தவன்

    இயற்கையை இரசிக்க தெரியாதவனுக்கு
    கண்ணிருந்தும் பயனில்லை

   உயர்ந்த எண்ணம் உன்னை
   வான் வரை உயர்த்தும்

   வற்றலாய் காய்வதை விட
   வரிக்குதிரை போல் ஓடுவது நல்லது

   கடன் வாங்கி காற்றை வாங்காதே

  நன்றி 
  உதய்ஸ்ரீ 

Sunday, November 26, 2017

த000020 - ஓரடியான் - கவிதை -உதய்ஸ்ரீ

12/8/14
2: மதியம் 
கவிதை -உதய்ஸ்ரீ 

                                         
                                                    ஓரடியான் 

புத்தகம் : மற்றவருக்கே  பயன்படும் சுயநலமற்ற  பொது தொண்டன்

நாற்காலி :  பேதம்மின்றி மற்றவரை சுமக்கும் சுமைதாங்கி

மழை       :  வரியவனுக்கும் உதவிடும் உத்தமன்

முகத்திரை   :  உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் மாயவலை

காதல்       :  எதிரியையும் அன்பால் வளைத்திடும் உயர்நிலை

எழுத்தாணி :  மற்றவரின் மனநிலையை வெளிப்படுத்த உதவும் விறல் கோல்

வார்த்தை :  நினைத்தால் உயிரையும் கொல்லும் சொற்க்கூட்டம்

கண்ணாடி  உருவத்தை மட்டும் பார்க்க உதவும் மதியற்ற பொருள்

கடல் நீர்  :   செல்வந்தர் போல் அடுத்தவருக்கு உதவாது

இறப்பு   :  நீ செய்த புண்ணியத்தால் நீ பெரும் பதவி

பிறப்பு  :   நீ செய்த பாவத்தை கழித்துக்கொள்ள கிடைக்கும் தக்க தருணம்

தாய்   உன் உடலை சுமக்க தன் உடலை வருத்திக்கொள்ளும் தெய்வத்தின்                       எதிர்ரொளி

தந்தை தன் குடும்பத்தை வழிநடத்தி செல்லும் நல்ல மெய்ப்பாளன்

பூமி  நீ இறந்த பின்னும் உன் உடலை சுமக்கும் உன்னத தாய்

நண்பன்   அவனின்றி ஓர் அணுவும் அசையாது

மறுஜென்மம்  முகமறியா பனி மூட்டம்

கைபேசி  மனிதனை தொற்றிக்கொண்ட தொழுநோய்

கடிதம்  :  மறைத்து போன மகான்

தண்ணீர்  : பிரியாத உறவு

கல்லறை : பேதமின்றி வாழும் அதிசய உலகம்

இரத்தம் :  அதினிலும் பிரிவினை வைத்த கடவுள்

ஏழ்மை  :  அமைதியாய் வாழ கடவுள் தந்த சிறந்த நிலை

உயர்பதவி :  முள்மேல் படுக்கை

முத்தம் :  உணர்வுகளின் வெளிப்பாடு

பைத்தியம் : தேவைகள் அதிகரிக்க ஏற்பட்ட மந்த நிலை

கடவுள் :  கண்ணுக்கு தெரியாத அணு சக்தி

மனம் :   தான் என்னுவதை வெளிப்படுத்த தெரியாத ஊமை

இளமை :  பூத்து சில மணியில் உதிர்த்திடும் புது மலர்

மதுபானம் :  மந்திரவாதியின் கைகோள்

குழந்தையின் சிரிப்பு :  கடவுள் வாழும் கோவில்

காசு :  ஆள் விட்டு ஆள் மாறும் நிலையற்றவன்

விதி :  நிலையானவற்றையும் நிலைகுழைய செய்யும் மாய நிலை

கணினி  : உலகத்தை தன் வயப்படுத்திய மந்திர கண்ணாடி

மரம் :  மற்றவருக்கு நிழல் தந்து தான் சருகாகும் தன்னிகரற்றவன்

பறவை :  ஒற்றுமையை கற்பிக்கும் அற்புத படைப்பு

நிலவு :  தான் கடனாக பெற்றதையும் மற்றவருக்கு தந்திடும் கர்ணன்

சூரியன் :  சுட்டெரிக்கும் சுடரொளி

இரவு :  ஓய்வெடுக்க உதவிடும் தருணம்

இரவு விடுதி :  குள்ள நரிகள் கூத்தாடும் பொது கூட்டம்

நன்றி 
உதய்ஸ்ரீ 

Saturday, November 25, 2017

த000019 - சூரியனை காதலிக்கும் காதலன் - கவிதை - உதய்ஸ்ரீ



28/2/13
2:40 மாலை 
கவிதை - உதய்ஸ்ரீ 

                               சூரியனை காதலிக்கும் காதலன் 


                                                                                                               Image result for sun images free

                                                                                   
மாலையில் மேற்திசையில் - நீ
செல்லும் போது உன் கட்டழகு
மேனிகண்டு மயங்கி மதிகெட்டு
மன்றாடுகிறேன்,

உன்னிடம் காதல் பிச்சை கேட்டும்
துளியும் மனம் இறங்காமல்
குன்றின் பின் சென்று - உன்
முகத்தை மறைத்து கொள்கின்றாய்
இது எங்ஙனம் முறையாகும்,

விடியலில் பெருங்கடலில் - நீ
குளித்து மேல் எழும்போது
உன் மேனி தங்கம் போல்
ஜொலிக்கக்கண்டு தத்தளித்த
என் மனதை  நீ உணராமல்
மேலூர் செல்வது நியாயமா

காதலால் தவிக்கும் எனை பாராது
கோபமெனும் உன் பார்வையால்
நெருப்பென சுட்டெரிப்பது எங்ஙனம்
முறையாகும் காதலித்த அனுபவம்
இல்லையோ உனை காதலிக்கும்
என்நிலை அறியாயோ - என்
சூரிய பதுமையே.............

தங்க தாரகையே
தலையாத  மேனியளே
பொய்கை புது மலரே
புலவளர் புகழ் கொழுந்தே
வைர தோணியிலே
தவழும் தீப்பிழம்பே
கற்புக்கரசியளே
கம்பன் கவிமடலே
அர்பன் எனைக்கான
அனுதினம் வந்து விடு.....

ஒருதலை காதலால்
உலறுகிறேன் உன்முன்னே
கலவரம் செய்திடாது
வந்து விடு செஞ்சுடரே
பதின்மொழி கூறாயோ
பரவசம் நான் கொள்ள
என் பரனையில் ஒலியாயோ
கோமளக்  கன்னியலே..........

நன்றி 
உதய்ஸ்ரீ  

















Thursday, November 23, 2017

த000018 - பாரதியின் மேல் காதல் கொண்டால் - கவிதை - உதய்ஸ்ரீ

                                               Image result for bharathiyar images          


18/1/13
12: 58 இரவு 
கவிதை - உதய்ஸ்ரீ 


                                 பாரதியின் மேல் காதல் கொண்டால் 

கள்வெறி கொள்ளுதடா
உந்தன் கட்டழகு கவிதை கண்டு
பித்தாகி அலைகின்றேன்- என்னை
பிரிந்தே நீ எங்கு சென்றாய்,

பட்டங்கள் பல படித்தும்
நீ ஏன் பட்டினியாய் கிடந்தாய்
சட்டங்கள் ஆளுவதற்கு உன்போல்
ஜகத்தினில் யாருமில்லை,

உன்னை நினைக்கையிலே
என்னெஞ்சு வேகுதடா
ஊரார் உனைப்புகழ்ந்தால்
பெருமிதம் கொள்ளுதடா,

காத்து கிடக்கின்றேன் நானோ
நித்தம் காதலால் தேய்கின்றேன்
மாற்றும் மனதின்றி உன்மேல்
மதிகெட்டு அலைகின்றேன்


உன்னை போற்றி புகழ்ந்திடவே
புது வெள்ளம் தோன்றுதடா
பார்க்கும் திசையெல்லாம்
உன்பிம்பம் காணுதடா

கருமை நிறம் கண்டால்
 கள்வெறி கொள்ளுதடா
தேற்றும் ஆளின்றி நாளும்
என் தேகம் மெலியுதடா.

நன்றி 
உதய்ஸ்ரீ

Wednesday, November 22, 2017

த000017 - கற்பனை கலவை - கவிதை - உதய்ஸ்ரீ


Image result for colorful images











12/8/14
2: மாலை 
கவிதை - உதய்ஸ்ரீ
                                             கற்பனை கலவை 
காதல் 

உணர்வுகளை மட்டும் பகிர்ந்து
உயிரற்று வாழும் கல்லறை
நாகத்தின் தலைதனில் நடமிடும் முகத்திரை
மண்ணில் வாழும்  நுண்ணுயிர் - போல்
மனித உடலினுள் வளர்ந்திடும் உயிர் கொல்லி
இதை அறிந்தவர் வாழ்ந்திடலாம்
அறியாதவர் வீழ்ந்திடலாம்

கவிதை

செவிக்கு இனிமை மனத்துக்கோ புதுமை
படைப்பவருக்கோ தனிமை.

ஐ கூன் கவிதை

என் கவிதை என்ன டெஸ்ட் டீயூப் பேபியா
உன்  கருவின்றி பிறக்கிறதே.

சந்தேகத்துக்கு அளவில்லை 

உன் கண் விழிகளுக்குள் தெரியும் பிம்பம் யார்
எனக்கேட்டான் அவள் முன்னின்று.

காதலர் தினம் 

காதலர்களுக்கு ஒவ்வொரு நாளும்
திருநாள் தானே !
பின்பெதர்க்கு தனி ஒரு நாள்

இன்றைய பிள்ளைகளின் தவறான போக்கால் 

எத்தனை தாய் சிந்துகிறாளோ
உதிரத்தை கண்ணீராய் திரைக்கு பின்.

தோழி 

தாயோ உன்னை கருவில் சுமக்கிறாள்
தாரமோ உன்னை மடியில் சுமக்கிறாள்
தோழி மட்டுமே உன்னை நெஞ்சினில் சுமக்கிறாள்
நல்ல தோழி அமைத்திட நற்றவம் செய்திடல் வேண்டும்.

மாணவர்கள் 

புத்தக பூக்களில்
தேன் உண்ணும் வண்டுகள்.


நன்றி 
உதய்ஸ்ரீ

Tuesday, November 21, 2017

த000016 - அர்த்தநாரீஸ்வரர் - கவிதை - உதய்ஸ்ரீ

                                                  Image result for ardhanarishvara images hd


20/11/17
14:38 மாலை 
கவிதை - உதய்ஸ்ரீ 

                                 


                                         அர்த்தநாரீஸ்வரர்

இரவை பகலாக்கி
வீதியை படுக்கையாக்கி 
அண்டிப்பிழைக்கும் -
 கயவர்களுக்கு
போர்வையாய் வாழும் அவலம் ஏன்,


குன்றின் மீது விளக்கேற்றிய போதிலும்
கொல்லைப்புற வாசலை அடைத்த மாந்தர்
பிறந்த மண்ணல்லவா,
தாய்தந்த மார்பகம்முண்டு 
தந்தை தந்த தோளுண்டு
ஊர் தந்த உரமுண்டு
உயர்ந்து வாழும் எண்ணம் கொள்ளு,

கையேந்தும் நிலை தள்ளு
துணிந்து பேசும் விதை கொள்ளு
ஏலனப்பொருள்  நீ இல்லை                               
ஏந்தி வாழும் நிலை எதற்க்கு 
சமத்துவம் தந்தாள் போதாதென்று
சமபந்தி விருந்து கேளு,

இப்பிறவியை தந்தது கடவுளே அன்றி
மனித குற்றம் ஏதும்மில்லை
மண்ணை ஆளவும் செய்திடலாம்
மகத்துவம் எல்லாம் நீ புரிந்திடலாம்

காம கசடுக்கு பணித்து போகும் நிலைதனை
மாற்றி ஒரு அடி எடுத்து வை நீ.....................................

ஆண் பெண் இரண்டையும் படைத்தான்
இரண்டையும் சேர்த்தே உன்னுள்  படைத்தான்
படைப்பில் குற்றம் செய்திட வில்லை
இரண்டின் அழகையும் உனக்குள் வைத்தான்

கூனிகுறுகும் வாழ்க்கை எதற்க்கோ
புதருக்குள் வாழும் நீலைதான் எதற்க்கோ
மாற்ற நினைத்தால் மாற்றிடலாம்
மண்டி இடுவதை விட்டு விடு
கடவுளே அன்றி வேறொருவர் முன்னும்
தலைகுனிவதை விட்டு விடு

இரவை  பகலாக்கி
விடியலை கைக்குள் அடக்கி வைக்கும்
முகம்மதை கிழித்த எறிந்து விடு 
இந்த நிலைதனை முழுதாய்  எறிந்து விடு.....

உண்டி குலுக்கும் வாழ்க்கை விட்டு
உலகில் உனக்கொரு இடம் தேடு
அண்டி பிழைப்பது மோசம் என்று
உனக்கென்றோர் அடையாளம்
காட்டியே உயர்ந்து நில்லு

அரவாணிகள் என்றொரு பேர் எதற்கு
நீயே அர்தநாரீஸ்வரராய் நீ இருக்க ................

அரவாணிகள் என்றொரு பேர் எதற்கு
நீயே அர்தநாரீஸ்வரராய் நீ இருக்க ................


அர்த்தநாரீஸ்வரரே போற்றி
அகிலம் ஆண்டாய் போற்றி 
அபயம் தந்தாய்  போற்றி
அம்மையும் அப்பனுமானாய் போற்றி
ஆதி மூலமே போற்றி
அண்ட  சராசரமே போற்றி
அனுதினம் காப்பாய் போற்றி
ஆபத் பாண்டவனே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி ............


பூர்வஜென்ம பாவம் தீர்ப்பாய் போற்றி
மூ உலகை ஆள்பவனே போற்றி
ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
வடக்கு தெற்கும் ஆனாய் போற்றி
கிழக்கிலும் மேற்கிலும் உதித்தாய் போற்றி
பார் கடல் அமுதே போற்றி
பராக்கிரமசாலியே போற்றி
தீமைதந்தே வாழ்வில் உண்மையை உணர்த்தினாய் போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி.......
போற்றி போற்றி போற்றி போற்றி ................


படைதனை வென்றாய் போற்றி
பாமரனை காத்தாய் போற்றி 
கலியுக பரனே போற்றி
ஜடாயுதம் தரித்தாய் போற்றி
சூல நாதனே போற்றி
சூரிய பிழம்பே போற்றி
சுடலை நாதனே போற்றி
முனீஸ்வரனே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி............

போற்றி போற்றி போற்றி போற்றி..............


நன்றி 
உதய்ஸ்ரீ






























Sunday, November 19, 2017

த000015 - இன்றைய அவலங்கள் - கவிதை- உதய்ஸ்ரீ


3/2/12                                                                                                        


கவிதை- உதய்ஸ்ரீ
10.10 பகல்
                                  இன்றைய அவலங்கள்


    Image result for cell phone talk  images
  • செல்போன் காதல்  

வத்திக்குச்சி இல்லாமலும் தீ பற்றும்
மின்சாரம் இல்லாமலும் பல்ப் எறியும்
சிம் கார்டும் தேய்ந்து போகும்
காத்துக்குள்ளும் வெடிவெடிக்கும்
பித்தனாகவும் ஆக்கிவிடும்
மிச்ச மீதியையும் அழித்துவிடும்.


  • சில நொடி 


அன்றைய காதல்
கல்லறையில் மறையும்
இன்றைய காதலோ
சில நொடியில் மறையும்


  • அழகிய சென்னை 


ஐயப்பன் கோவிலுக்கு
நடந்தே செல்லும் பக்தர்கூட்டம்
சென்னையை வலம் வந்தாலே போதுமே !..


  • தெருவிளக்கு 


இருள் என்னும் பேரழகி
ஒட்டு துணிகளுடன் உலவுகிறாள்
தன் முழு அழகையும் மறைக்க இயலாதவளாய்.


  • சமத்துவம் 


விதியிலோ குழாயடி சண்டை
சமத்துவம் வேண்டும்மென்று
முழங்குகிறார் மேடைப்பேச்சாளர்.

நன்றி
உதய்ஸ்ரீ

Friday, November 17, 2017

த000014 - அனைத்திலும் பாதி - கவிதை - உதய்ஸ்ரீ


Image result for love romantic images hd




10/1/13
3.10 பகல் 
கவிதை - உதய்ஸ்ரீ
                             
                                                            அனைத்திலும் பாதி 

காதலிக்கும் போது நான் அவளை பார்த்து :


என்னில் பாதி, எழுத்தில் பாதி
சொல்லில் பாதி, தேன்சுவையில் பாதி
விண்ணில் பாதி, வியப்பில் பாதி
கண்ணில் பாதி, கருவிழியில் பாதி
உறவில் பாதி, உதட்டசைவில் பாதி
என்றேன்,


அவளோ பதிலுக்கு

இரவில் பாதி, இதயத்துடிப்பில் பாதி
சிவனில் பாதி, தீன் - சுவையில் பாதி
பன்பில் பாதி, பாண்டிய நடையில் பாதி
உன்னில் பாதி, உள்ளுணர்வில் பாதி
புல்லில் பாதி, புர்ப்பசையில் பாதி
என்றாள்.

திருமணத்துக்கு பின் 

இன்றோ அவள் 

செலவில் பாதி, செய்யும் செயலில் பாதி
சமைப்பதில் பாதி, சுத்தம் செய்வதில் பாதி
துவைப்பதில் பாதி, தூசி தட்டுவதில் பாதி
மடிப்பதில் பாதி, மாடிப்படி பெருக்குவதில் பாதி
படுக்கையும் பாதி , பத்து பாத்திரம் துலக்குவதிலும் பாதி
என்கிறாளே அய்யகோ...................

நன்றி 
உதய்ஸ்ரீ                                                                            Image result for tension images


Thursday, November 16, 2017

த000013 - பனி கொண்ட காதல் - கவிதை : உதய்ஸ்ரீ

7/1/13
கவிதை : உதய்ஸ்ரீ 
                       
Image result for snow images hd                                      பனி கொண்ட காதல்.............. 


வானிலே நான் சிறகடித்து பறந்தேன்                             
சூரிய ஒளிபட்டு கரைந்தேன்
 பசும்புல் போர்வைமேல் படர்ந்தேன்,

எங்கிருந்தோ வந்த ஒளி அழைத்துச்செல்ல
மீண்டும் விண்ணுக்கு சென்றேன் 
அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ பறந்தேன்,

அழகே, உன் இமை கண்டு விழுந்தேன்
இடைகண்டு கரைந்தேன்
உன் இதழ் பட்டு தெரித்தேன்
உன் உடல்பட்டு உறைந்தேன்
உன் விரல்பட்டு சிதைந்தேன்
உன் பாதம்பட உடைந்தேன்,

பனிகொண்ட காதல்
பிணியாய் போனதோ...............

நன்றி                                                                               
Image result for snow images hd
உதய்ஸ்ரீ

Wednesday, November 15, 2017

த000012 - கனவு பூக்கள் ( கனவுக்குள் கனவு ) - உதய்ஸ்ரீ

4/2/13
கவிதை: உதய்ஸ்ரீ 
3.59 பின்
                             கனவு பூக்கள் ( கனவுக்குள் கனவு )
                                                                                                                   
Image result for dream imagesதூரிகை கொண்டு ஓவியம் தீட்ட எண்ணி
வண்ணங்களை பார்த்தேன்- வண்ணங்களோ
வான வில்லாய் விண்ணுக்கு ஓடின,

பூக்களை தொடுக்க எண்ணி
தோட்டம் சென்றேன் - பூக்களோ
தன் சிறகுகளை விரித்து விண்ணுக்கு
பறந்தோடின வண்ணத்துப்பூச்சிகளாய்,

காகிதம் கொண்டு கவிதையெழுத எண்ணி
பேனாவை எடுத்தேன் பேனாவில் உள்ள மையோ
மறைந்து ஓடி கருமேகங்களாய் விண்ணில் சூழ்ந்தன

வியப்புக்கு எல்லையில்லை அவைகள்
செய்யும் செயல்களை எண்ணி எண்ணி
எண்ணியே கண்ணயர்ந்தேன்
கண்ணயர்ந்தவள் திடீரென்று கரைந்து
மழையாய் விண்ணிலிருந்து
தட, தட வென விழுந்தேன்!!!.......

திடுக்கிட்டேன்!!!!....
 எல்லாம் மாயை.!!!!.....
ஆம் எல்லாம் கனவு பூக்கள்,

நன்றி
உதய்ஸ்ரீ



Tuesday, November 14, 2017

த000011- டொட்டபெட்டா சிகரம் -உதய்ஸ்ரீ

8/8/13
கவிதை- உதய்ஸ்ரீ 
                                
                                                        டொட்டபெட்டா  சிகரம் 

Image result for doddabetta images உறைந்து போன பனி
உள்ளத்தை  உறைய செய்யும் நினைவுகள்,

 காற்றில் கலந்த கவிதை
பாட மறந்த குயில்,

 நின்று போன மேகம்,
நிலவு ஒலித்துகொள்ளும் கூடாரம்.

 பறந்தோடிய பறவைகள்,
பறக்க மறந்து தேன் உண்ணும் தேனீக்கள்,

 ஓடையில் துவண்ட படகு
தன்னில் அமர்ந்து இளைப்பாற ஆளின்றி தவிக்கும் தனிமை,

 மூச்சடைத்து நிற்கும் பாறை
அவற்றில்  முகம்பதித்தே ஓடும் ஓணான்கள்,

பல்லைக்காட்டும் மந்தி
குதித்தேதாவும் தன் இடை கட்டிய குட்டியுடன்,

 கிளையை உரசும் கிளி
சூட்டை வெளியேற்றும் தன் ஜோடியுடனே,

 தன் கனத்த முலையுடனே
பகட்டாய் திரியும் பசுக்கள்,

 வத்திப்பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிவிட்டு
ஒலித்துக்கொள்ளும்  மனிதர்கள்,

  அடர்ந்தகாடு 
அதில் உறங்கும் பசுமைகள்,

நிமிர்த்து பார்க்கச்சொல்லும் மரங்கள்
சருக்கப்பார்க்கும் சாலைகள்,

 சூடுபறக்கும் சுண்டல்
சுவையை ருசிக்கும் நாக்கு
விரலுக்கோ கவசம்
காதுகளுக்கோ போர்வை
உள்ளத்தை போர்த்தி
உணர்வுகளை விரித்தே தொட்டு விட பார்த்தேன்
டொட்டபெட்டாவை.

நன்றி
உதய்ஸ்ரீ



Friday, November 10, 2017

த000010-போனவன காணலையே - கவிதை - உதய்ஸ்ரீ

10/11/17
5:மாலை 
கவிதை - உதய்ஸ்ரீ
                                               போனவன காணலையே


Image result for upset indian womans images
போனவன  காணலையே

பொழுதுமட்டு சாஞ்சிடிச்சி
போகும்பாத தெரியல
பெரும்மூச்சு ஓயல ...

வீதிமுழுக்க அலஞ்சிப்புட்ட
விட்டு போனவ திரும்பவில்ல
வீட்டு செவத்துல சாஞ்சியேத்தா
விடியுவர  நின்னுபுட்ட...

வீதிவழிபோறவனு வெறிச்சிதா எனப்பாக்க
வீடு திரும்பு ஆடு மாடு
வீட்டு செவத்துல குத்தவைக்க
விட்டில் பூச்சும்  எனப்பாத்து
விடியுவர துணைக்கிருக்க ....

போனவன  காணலையே
பொழுதுதா சாஞ்சிடுச்சே,..

காத்தடிச்சி காத்தடிச்சி
ஈர துணியு உலர்ந்திடுச்சி
பொலபொலன்னு அழுததில
மொத்த துணியு  நனைஞ்சிடுச்சி..

உச்சி வெயிலு அடிச்சதுல
உடம்புதா கருத்திடுச்சி
கட்ட எறும்பு கடிச்சதுல
காலுதா  வீங்கிடுச்சி
காலால நடந்து நடந்து
காய்ப்புதா  காச்சிடுச்சி
கஞ்சிக்கு வழியுமில்ல
கருகமணியு அறுந்திடுச்சி....

சித்தாலப்பாக்கம் போயி
சீட்டுதா குலுக்கிப்பாத்தா
கொட்டு மழையிலையு
கொண்டவன  தேடிப்பாத்த.....

ஆத்து குளத்துலயு
அயில மீன கேட்டுப்பாத்தா
அரச புரசலா ஊரு ஏச
அசிங்க பட்ட

போனவன  காணலையே
பொழுதுதா சாச்சிடுச்சே.....

சட்ட பொத்தானையு
தச்சிதா மடிச்சிவெச்ச
சாக்கு மூட்டையல்லா
உருட்டியே தேடிப்பாத்த
துண்டு சீட்டையு
துடுப்பாக்கூட விட்டுபோல....
துடிக்கு என்மனச
தூர விட்டு போனவனே

போனவன காணல
பொழுதுதா சாஞ்சிடுச்சே......

நன்றி
உதய்ஸ்ரீ

Thursday, November 9, 2017

த00009- காதல் மடல்-கவிதை- உதய்ஸ்ரீ

கவிதை- உதய்ஸ்ரீ 
                           
                                                      காதல் மடல்
Image result for romantic images
பெண் : பொய்கலந்து தேன்கலந்து
               தெவிட்டாமல் நாணுவந்து
               தரும் இம்மடல்தனை - நீ
               பருக்காவிடினும் உன்
               உண்மை அன்பு பருகுமே.

ஆண்  :   வாரியே  அணைப்பேன் என்று
                கூறியே சென்ற நின் வார்த்தை
                பொய்யாகுமெனினும் மெய்யெனக்கொள்ளும்
                 விந்தையினை நான் அறிவேன்
                 என் தெள்ளமுது தேனே.

பெண்  :   தஞ்சை வீடென்று தரணியிலே பலவுண்டு
                 தர்மம் செய்வார்க்கு குடையாக அது நின்று
                 காக்கும் தெய்வமாய் பலகோடி மக்களையும்
                  அது உன்னில் சேர்ந்தொழுக
                  அருள்வாக்கு தந்திடுமே.

ஆண் :       எட்டுத்திக்கிலும் என்னைவெல்ல யாருமில்லை
                  இருந்தும் உன் சிறுகண் எனைதோற்கடிக்க
                  துவண்டுவிட்டேன், சிலநொடியில்
                   பெரிய வீரனையும் தோற்கடிக்கும்- உன்
                    கயல்விழியின் வீரம்கண்டு, உன்- முன் தலைகுனித்தே
                    மன்றாடி கேட்கின்றேன்.

பெண் :      சோலை மலர்களும் செல்லமாய் தலையசைக்க
                    ஜோடி புறாக்களும் நம்மைக்கண்டு காதல்பழக
                    பாம்பும், தேளும் கூட பல்லிளித்தே நாணம் கொள்ள
                     விந்தை என்ன செய்தாய் என்னை உன்னிடத்தில் கொள்ள. 

ஆண் :         கட்டழகு தேரிலே வண்டினங்கள்
                    கவிபாட காளைமாடுகளும் மண்டியிட்டே
                    உனைவணங்க தேக்கு மரமொத்த
                    தோலைக்கொண்டவனும் உன்
                    கட்டைவிரல் நுனிக்கண்டு தினம்
                    தேய்ந்தே சருகாக, சாலை வீதியெங்கும்
                    சந்தனங்கள் குழைந்தோட, நோயுற்ற
                    சிற்றினங்கள் தன் நோய்த்தீர்க்க தட்டுத்தடுமாறி
                    இரைதேடி காட்டுவழி செல்வதுபோல்
                    கானகத்தே உனைத்தேடி நூற்றிரவை
                    கடந்து சென்றும் உனைக்கான -இக்
                    கண்கள் சிலநொடியேனும் பிழைத்து கொள்ள
                    உன் சிறுநொடி அசைவேனும் என் முன் வாராதோ.

பெண் :       வானத்து வெண்ணிலவை தலையில்
                    சூடிக்கொண்டே, பட்டாடை தந்துசென்ற
                    சூரியனை துணைக்கழைத்தே
                    தேவலோக கன்னியாய் தேன்குடங்கள் சுமந்துகொண்டு
                    படர்ந்த புல்வெளியில் படுத்துறங்கும் பனித்துளிபோல்
                    உன் மார்பகத்தே நான் புதைந்து - உன்
                    மஞ்சமதை நான் முகர திங்களிடம் நாள் கேட்டு
                    உன் மெய் தழுவ வருவேனே.

ஆண் :         கோடானு கோடி என் மண்புதைந்தே
                    நின்றாலும் உன் சின்னஞ்சிறு கொடியெனை
                    சுற்றும் பேரின்பம் எதிலுண்டோ சொல்
                     இவ்வையகமே வந்தாலும் உனக்கிணையாதல்
                     ஏதுமுண்டோ இச் ஜென்மம் நான் பெற்ற
                      இப்பேரின்பம் தன்னை - எச்
                       ஜென்மமும் நானடைய வரம் தன்னை தருவாயோ
                       என் தெள்ளமுது தேனே !....

நன்றி
உதய்ஸ்ரீ
                 

Wednesday, November 8, 2017

த00008-கரிகால் பெருவளத்தான் - உதய்ஸ்ரீ

26/11/13
11.49 பகல்
கவிதை - உதய்ஸ்ரீ
                                    கரிகால் பெருவளத்தான் 

  கரிகால் பெருவளத்தானே,
கட்டழகு மங்கையை கடைக்கண்ணால்
எடைபோட்டு, எட்டினின்றே
 காந்தமென அவள் மெய்யழகை
தீண்டிய உன் வீரமதை என்னென்பேன் என்னென்பேனே,

  காவலாய் பலபேரிருந்தும்,
 கண்கட்டி வித்தைபோல் கயவரின்
 கண்ணைக்கட்டிய -கயமனே... !
 உன் மடிமீது விழவைத்த கன்னியை
கட்டியே அணைக்காமல் கண்ணிமைகள்
மெல்லெழும்பும்  ஒலிபோல் மெல்லென
 அவளுடலை அள்ளியே மலர் படுக்கையில்
 கிடத்தி அவளழகை கண்கூடக பார்த்தபின்னும்
 அவலுரிமை இன்றியே அவளை தொடாமல்
 அவளுக்கு காவலாய் நின்ற உன் வீரமதை
 என்னென்பேன், என்னென்பேனோ,

மொட்டுக்கள் மலரும் அதிகாலை நேரத்தில்
மேகத்தில் நீலவண்ணம் தெறித்தால் போன்றே
அவலுடல் வண்ணம் பிரகாசிக்க, பிரிந்த மணாளன்
வந்தானோ என்று அவள் விழிகள் மெல்லெழுத்து
 முந்தானையை விளக்கியே அவன் முகமதைக்கான எண்ணியே
 படர்ந்த தன் கூந்தலை மெல்லெனவிலக்கியே அவனைக்கான,
 நல்முத்து பவளங்களில் ஒளிர்கின்ற ஒளிகளைப்போல்
 அவன்கண்ணின் ஒளிக்கண்டு மின்னல்கள் பயந்தோட
 விதிகளிலிட்ட வண்ணமிகு கோலங்கள் எல்லாம்
விண்ணுலகம் பறந்தே தான் வியக்கும் வண்ண வான
 வில்லாய் விந்தைகள் காட்டி காட்டி அவன் அழகை சொல்ல
 அற்புதங்கள் பலகண்டும் அவள் எண்ணம் மாறாமல்
 தன் கணவனையெண்ணியே தன் மனம் செல்லும்மென்றே
 புனிதமான கற்புக்கரசி இவள் என்று  அவன் என்னும் அளவிலே
 அவன் வியக்க, என் மன்னனின் அற்புதங்களை,
 என்னென்பேன் என்னென்பேனோ,

 தங்க தேரிலே தவழ்கின்ற நறுமணம்மிக்க
 சந்தன வாசம்தனை கண்டே கரிகாலன் வந்தானோ,
 என்று ஊர்குருவிபோலே ஊர் பெண்டீர் மனம் உயரவே
 பறந்தெழ மாளிகையுள்ளிருந்து ஓடிவந்து ஊர்ரடகு வேளைவரை
 காத்திருந்து, கால்கடுப்பும் தெரியாமல் கண்ணிமைகளை
 மூடாமல், அவன் வரவை எதிர்கொண்டே இருக்க,
 மாட மாளிகைகளின் ஒளிவிளக்கு அணையாமல் அவன்
 முகஅழகை காண எண்ணியே வட்டமிடும் காற்றின் அசைவுக்கும்
 அசையாமல் அவன் வரவை எதிர்கொண்டு காத்திருக்கும்
 பேரழகை நான் என்னென்பேன் என்னென்பேனோ......

நன்றி
 உதய்ஸ்ரீ 


E00007- Festival of ghosts- Varnanai - Udhaisri

Festival of ghosts
3: True
Birth 28/2/15
Peikalintiruvila - udhaisri
                                                             Festival of ghosts
                                             
 Bleeding and bleeding after the battle, the bulls and vampires were bleeding, bamboo crowds and rattles, and they ran out of the nostrils, like water stagnant puddings Speaking and c The fox, the foxes, the jumping upside down, the ghosts, the foxes, the one on the top of each other fought and fights up, Fuck in every finger Iya vampire ditch so close to the people and his beak fastening onto ran eagle large ammo vilut keep her toes as they fell, letting clutching, holding, and where the pitunkivituvarkalalo fearing marakkottipe the swift peck eat, pintat the nerve emerged from the blood peach visiting its face The silk terikka it and the indifference to its propeller ignore the propeller flowing from the blood of the arena floor payttota on the battlefield, his single hands and feet lost, survivor man eat without food left in his small intestine colon kavvitinna, his single hand on his stomach, holding the body on the floor and rubbing iluttapati gradually nakarttuvantu peykaluta As the ghosts of herself she holds her blood under her single hand and licking her appetite with dogs with dogs ..............

Thanks
Udhaisri

த00007 - பேய்களின்திருவிழா- வர்ணனை - உதய்ஸ்ரீ

பேய்களின் திருவிழா 
3:பகல்
பிறப்பு 28/2/15
வர்ணனை : உதய்ஸ்ரீ
                                                 பேய்களின்திருவிழா

 போர்க்களத்தில் போருக்குப்பின் சிதையுண்ட சதை பிண்டங்கள், கைவேறு, கால் வேறுமாய், இலை உதிர்காலத்து சருகுகள் போல் சிதைந்துகிடக்க, கோட்டானும் , குறுநரியும் ஊளையிட, பேயும், காட்டேரியும்,திருவிழா வந்து விட்ட து என்று பறை கொட்ட,பேய் கூட்டங்கள் தலைவிரித்து நாலாதிசையிலும்மிருந்து ஓடிவர மழை பெய்தால் ஏற்படும் நீர் தேக்க குட்டைகள் போல், எங்கும் இரத்தம் தேங்கி  உரைத்து கிடைக்க, சிறு நரி கூட்டங்கள், அக்குட்டையில் குதித்து விளையாட, பேய்களும், நரிகளும், ஒன்றன் மேல் ஒன்றாய் விழுந்து சண்டையிட்டு, பிண்டங்களை அள்ளிக்கொண்டு ஓட, இத்தலை எனக்குத்தான் என்று ஒன்றுடன் ஒன்று உருண்டு புரள, இதை பார்த்த கழுகு இடை பூந்து அந்த தலையை கவ்விக்கொண்டு போக, கிடைத்ததே போதும்மென்று யானை காலில் மிதிபட்டு நசுக்கி பிதுங்கிய மூளையை கையால் அள்ளி ஒவ்வொரு விரலாக உச்சிட்டு நக்கிய காட்டேரியை தள்ளிவிட்டு அதன் அருகில் கிடைத்த பேருடலை தன் அலகால் கவ்விக்கொண்டு ஓடிய கழுகு பெரிய ஆலமரத்தின் விழுதில் வைத்துக்கொண்டு தன் கால் விரல்களால் அவை விழுந்து விடாமல் கெட்டியாக பிடித்தபடி, மற்றவர்கள் எங்கே வந்து பிடுங்கிவிடுவார்களாலோ என்ற பயத்தில் மரக்கொத்திபோல் வேகமாய் கொத்தி சாப்பிட, பிண்டத்தின் நரம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் பீச் சென்று அதன் முகத்தில் பட்டு தெறிக்க அதை சிறிதும் பொருட்படுத்தாது தன் இறக்கையால் தள்ளிவிட, அந்த இறக்கையிலிருந்து ஒழுகும் இரத்தம் ஆறென தரையில் பாய்த்தோட, போர்க்களத்தில் தன் ஒற்றை கைகால்களை இழந்து உயிர் பிழைத்த ஒருவன் உண்ண உணவின்றி தவிக்க அவன் சிறுகுடலை பெருங்குடல் கவ்விதின்னா, தன் ஒற்றை கையால் தன் வயிற்றை பிடித்தபடி உடல் தரையில் தேய்த்து இழுத்தபடி மெல்ல மெல்ல நகர்த்துவந்து பேய்களுடன் பேய்களாய் தானும் கீழ்விழும் இரத்தத்தை தன் ஒற்றை கையால் பிடித்து நாக்கால் நக்கி நாய்களுடன் நாய்களாய் தன் பசியை அடக்கினான்..............

நன்றி
உதய்ஸ்ரீ  

Sunday, November 5, 2017

த00006-வீடு என்பேரில் படுக்கவோ இடம்மில்லை - உதய்ஸ்ரீ

9 இரவு
8/10/14
கதையும் கவிதையும்- உதய்ஸ்ரீ 
                                                      வீடு என்பேரில் 
                                                                    படுக்கவோ    இடம்மில்லை 

அங்கும் இங்குமாய் அலைந்து பட்டாவாங்கி பம்ப்செட் போட்டு, என் வேர்வையிட்டு குழைத்த சிமெண்ட்டை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிய செங்களின் மேல்பூசி பார்த்து பார்த்து கட்டிய என் சின்னச் சிறு வீட்டில் கொசுக்களோடு நானுமாய் இரவெல்லாம் தூங்காது கண்விழித்து, கட்டில் எங்கே போடுவது தொட்டில் எங்கே கட்டுவது என்று ஒவ்வொரு நாளும் யோசித்தே  , கூலிக்கு ஆள் பிடித்தும் பத்தாமல், ஒத்தாசைக்கு கூடவே நானும் மண்சுமந்து பார்த்து பார்த்து நான் கட்டிய வீட்டின் வாசலிலே, வாழைமரம் கட்டி உற்றார் உறவினருடனே கிரஹப்பிரவேசத்தையும் முடித்து அம்மாடா... என்று நிம்மதியாய் பெருமூச்சுடனே, பலநாள் கழித்து உறங்க சென்றேன், படுக்கும் அறைமுழுவதும் பிள்ளைகளின் படிக்கும் அறையாய் மாறிப்போக, முற்றமோ தொலைக்காட்சியின் தொல்லை கூடமாய் தலைவிரிக்க, சமையல்கட்டிலோ என் சண்முகி சாமான்களுடன் சண்டை போட, வராண்டாவிலோ வீதி நாய்கள் தஞ்சம் கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்து வீதியின் ஒதுக்கு புறமாய் என் ஒத்த கட்டிலை விரித்தே ஓய்ந்து போன என்கட்டையை அதில் விரித்தேன் வீடு கட்டிய நிம்மதியில்......... வீடோ என்பேரில் படுக்கவோ இடம்மில்லை.

நன்றி
உதய்ஸ்ரீ 

Friday, November 3, 2017

த00005-என் ஆடு என் வயிற்றில - உதய்ஸ்ரீ

30/10/17
கவிதையும் கதையும் : உதய்ஸ்ரீ
12: 27 பகல்30/10/17

                                              என் ஆடு என் வயிற்றில 

      அங்கும் இங்குமாய் துள்ளியே விளையாடி, பசும் புல் தழைகளை ருசித்து புசித்திட்டே , சிறு ஓடைதனில் தன் கால் பதியாது எக்கியே நீர்பருகி மேடு மலைதனில் தன் நண்பர்களுடன் துள்ளி விளையாடி நான் கூப்பிடும் குரலுக்கு துள்ளியே ஓடி வந்து, என்னை கொஞ்சி விளையாடும் என் சின்னச்சிறு ஆட்டு குட்டி எங்கு சென்றது என அறியாது ,அங்கும் இங்குமாய் நான் அழைத்தும், பல முறை வீரா,  வீரா,  என்றழைத்தும் பலனின்றி நான் அலைய , பகல் பொழுதும் மெல்ல  தன் இடம் பெயர்ந்தும், வீடுதிரும்பாத நிலைகண்டு   அம்மாவிடம் சென்று கண்ணிருடனே நான் நிற்க, வாடிய என் முகத்தை கண்டா அம்மா ஏன், பாபாவின்  முகம் வாடியதோ ? "என்றெனை கேட்க" வாய் திறந்து சொல்ல முடியாத நிலை எனை சூழ ,அம்மாவோ பாபாவுக்கு பசிக்குதா என்று சொல்லியபடியே தட்டில் சாத்தம்மிட்டு குழம்பு ஊற்றி ஊட்டிவிட அதை உன்ன முடியாது அம்மா.. அம்மா... ஏ... ஆடு, ஏ... ஆடு, என்று நான் தேம்பியழ.. என்கண்ணீரை துடைத்த படியே என் அம்மா, என் செல்லத்தின் ஆடுதானே பாபாவின் வயிற்றில் இருக்கே !  இதோ தொட்டு பார்,  என்றே என் கைகளை எடுத்து என்வயிற்றில் தடவிக்காட்ட கண்ணில் பெருக்கெடுத்த நீரருடனே வாயில்லிட்ட உணவும் உதிர்ந்தபடியே  சிலையாய்....!  " ஆ!  என் ஆடு  என் வயிற்றிலா!!............


நன்றி
உதய்ஸ்ரீ