Sunday, November 26, 2017

த000020 - ஓரடியான் - கவிதை -உதய்ஸ்ரீ

12/8/14
2: மதியம் 
கவிதை -உதய்ஸ்ரீ 

                                         
                                                    ஓரடியான் 

புத்தகம் : மற்றவருக்கே  பயன்படும் சுயநலமற்ற  பொது தொண்டன்

நாற்காலி :  பேதம்மின்றி மற்றவரை சுமக்கும் சுமைதாங்கி

மழை       :  வரியவனுக்கும் உதவிடும் உத்தமன்

முகத்திரை   :  உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் மாயவலை

காதல்       :  எதிரியையும் அன்பால் வளைத்திடும் உயர்நிலை

எழுத்தாணி :  மற்றவரின் மனநிலையை வெளிப்படுத்த உதவும் விறல் கோல்

வார்த்தை :  நினைத்தால் உயிரையும் கொல்லும் சொற்க்கூட்டம்

கண்ணாடி  உருவத்தை மட்டும் பார்க்க உதவும் மதியற்ற பொருள்

கடல் நீர்  :   செல்வந்தர் போல் அடுத்தவருக்கு உதவாது

இறப்பு   :  நீ செய்த புண்ணியத்தால் நீ பெரும் பதவி

பிறப்பு  :   நீ செய்த பாவத்தை கழித்துக்கொள்ள கிடைக்கும் தக்க தருணம்

தாய்   உன் உடலை சுமக்க தன் உடலை வருத்திக்கொள்ளும் தெய்வத்தின்                       எதிர்ரொளி

தந்தை தன் குடும்பத்தை வழிநடத்தி செல்லும் நல்ல மெய்ப்பாளன்

பூமி  நீ இறந்த பின்னும் உன் உடலை சுமக்கும் உன்னத தாய்

நண்பன்   அவனின்றி ஓர் அணுவும் அசையாது

மறுஜென்மம்  முகமறியா பனி மூட்டம்

கைபேசி  மனிதனை தொற்றிக்கொண்ட தொழுநோய்

கடிதம்  :  மறைத்து போன மகான்

தண்ணீர்  : பிரியாத உறவு

கல்லறை : பேதமின்றி வாழும் அதிசய உலகம்

இரத்தம் :  அதினிலும் பிரிவினை வைத்த கடவுள்

ஏழ்மை  :  அமைதியாய் வாழ கடவுள் தந்த சிறந்த நிலை

உயர்பதவி :  முள்மேல் படுக்கை

முத்தம் :  உணர்வுகளின் வெளிப்பாடு

பைத்தியம் : தேவைகள் அதிகரிக்க ஏற்பட்ட மந்த நிலை

கடவுள் :  கண்ணுக்கு தெரியாத அணு சக்தி

மனம் :   தான் என்னுவதை வெளிப்படுத்த தெரியாத ஊமை

இளமை :  பூத்து சில மணியில் உதிர்த்திடும் புது மலர்

மதுபானம் :  மந்திரவாதியின் கைகோள்

குழந்தையின் சிரிப்பு :  கடவுள் வாழும் கோவில்

காசு :  ஆள் விட்டு ஆள் மாறும் நிலையற்றவன்

விதி :  நிலையானவற்றையும் நிலைகுழைய செய்யும் மாய நிலை

கணினி  : உலகத்தை தன் வயப்படுத்திய மந்திர கண்ணாடி

மரம் :  மற்றவருக்கு நிழல் தந்து தான் சருகாகும் தன்னிகரற்றவன்

பறவை :  ஒற்றுமையை கற்பிக்கும் அற்புத படைப்பு

நிலவு :  தான் கடனாக பெற்றதையும் மற்றவருக்கு தந்திடும் கர்ணன்

சூரியன் :  சுட்டெரிக்கும் சுடரொளி

இரவு :  ஓய்வெடுக்க உதவிடும் தருணம்

இரவு விடுதி :  குள்ள நரிகள் கூத்தாடும் பொது கூட்டம்

நன்றி 
உதய்ஸ்ரீ 

2 comments: