9 இரவு
8/10/14
கதையும் கவிதையும்- உதய்ஸ்ரீ
வீடு என்பேரில்
படுக்கவோ இடம்மில்லை
அங்கும் இங்குமாய் அலைந்து பட்டாவாங்கி பம்ப்செட் போட்டு, என் வேர்வையிட்டு குழைத்த சிமெண்ட்டை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிய செங்களின் மேல்பூசி பார்த்து பார்த்து கட்டிய என் சின்னச் சிறு வீட்டில் கொசுக்களோடு நானுமாய் இரவெல்லாம் தூங்காது கண்விழித்து, கட்டில் எங்கே போடுவது தொட்டில் எங்கே கட்டுவது என்று ஒவ்வொரு நாளும் யோசித்தே , கூலிக்கு ஆள் பிடித்தும் பத்தாமல், ஒத்தாசைக்கு கூடவே நானும் மண்சுமந்து பார்த்து பார்த்து நான் கட்டிய வீட்டின் வாசலிலே, வாழைமரம் கட்டி உற்றார் உறவினருடனே கிரஹப்பிரவேசத்தையும் முடித்து அம்மாடா... என்று நிம்மதியாய் பெருமூச்சுடனே, பலநாள் கழித்து உறங்க சென்றேன், படுக்கும் அறைமுழுவதும் பிள்ளைகளின் படிக்கும் அறையாய் மாறிப்போக, முற்றமோ தொலைக்காட்சியின் தொல்லை கூடமாய் தலைவிரிக்க, சமையல்கட்டிலோ என் சண்முகி சாமான்களுடன் சண்டை போட, வராண்டாவிலோ வீதி நாய்கள் தஞ்சம் கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்து வீதியின் ஒதுக்கு புறமாய் என் ஒத்த கட்டிலை விரித்தே ஓய்ந்து போன என்கட்டையை அதில் விரித்தேன் வீடு கட்டிய நிம்மதியில்......... வீடோ என்பேரில் படுக்கவோ இடம்மில்லை.
நன்றி
உதய்ஸ்ரீ

No comments:
Post a Comment