Monday, November 27, 2017

த000021 - இப்படி வாழ்ந்தால் - கவிதை - உதய்ஸ்ரீ

18/8/14
2:06 இரவு 
கவிதை - உதய்ஸ்ரீ 

                                     இப்படி வாழ்ந்தால் 


  ஆடும் பொம்மையாய் இருப்பதை விட
  பொம்மலாட்டியாய்  இருப்பது நல்லது.

  நச்சு பாம்பை விட நயவஞ்சகன் கொடுமையானவன்

  நல்லவனாய் நடிப்பதை விட தீயவனாய் இருந்து விடு

  அறிவில் சிறந்தவனாய் இருப்பதைவிட,
  பண்பாளனாய் இருக்க முயற்சி செய்.

  கற்றதை எண்ணி பெருமை கொள்வதை விடுத்து
  கல்லாததை எண்ணி சிறுமை கொள்
 
  அடக்கம் என்பது ஆறறிவு
   அடங்காமை என்பது ஐந்தறிவு.

    சொற்குற்றம் காண்பதை விடுத்து
    சுயசிந்தனையை பெருக்கிக்கொள்

    மண்ணில் வாழ்வதை விட
    மற்றவர் மனதில் வாழ்வதே உயர்வு

    சருகாய் வீழ்வதற்கு முன்
    சந்தனமாய் மனம் வீசு

    காற்றாடி போல் பறக்க எண்ணாதே
    அறுபட்டால் மாட்டிக்கொள்வாய்

    கல்லறையில் தூக்குபவனையெண்ணி
    ஒரு கணம் நீ கண்ணுரங்கு

    நண்பர்களுக்கு உதவியாய் இருப்பதை விட
    உண்மையாய் இரு

    பேசுவதை குறைத்தால்
    மேன்மை பெருகும்

     மற்றவர்களை வாழ்த்துவதை காட்டிலும்
      வீழ்த்தாமை நன்று

      நீ பிறந்ததை எண்ணி பெருமை கொள்வதை விடுத்து
       எதற்காக பிறந்தோம் என்பதனை எண்ணிப்பார்க்க பழகிடு

     தலை நிமிர்த்து வாழ் நீ தமிழன் என்பதில்

     வாடகை மொழிக்கு வட்டி கட்டாதே

     கண்ணீர்ரைகாட்டி எதையும் பெற எண்ணாதே

     சில்லரை போல் சிதறாதே
     நோட்டை போல் அமைதியாய் இரு

     வாழ்ந்தால் ஆல மரம் போல் வாழ்
     வீழ்ந்தால் வாழைமரம் போல் வீழ்

    சேற்றில் கால் வைப்பவனை எண்ணி
    சோற்றில் கை வை

    கொள்ளை அடிப்பவனை விட
    கொலை செய்பவன் மேல்

    தனக்கு நிகரான உயிரினை மதிக்க தெரியாதவன்
    புழுவினும் அற்பமானவன்

   முழம் சறுக்கினாலும்
   ஜான் இருப்பதை எண்ணி எழுந்திரு

   தன்மானத்தை விற்று, வீடு கட்டாதே

  சோம்பேரிகளுக்கு மேலோகத்திலும்
  இடம் இல்லையென்பதை எண்ணிக்கொள்

   தோல்வியை எண்ணி கலங்குவதை விடுத்து
   முயன்றதை எண்ணி பெருமைகொல்

    சாதிக்க முயற்சி செய் ஆனால் அதில் சதியை நுழைக்காதே

    கலப்படம் செய்து காசை எண்ணாதே

   வானை நீ கடந்திட வட்ட நிலவை தூது விடாதே

   அடுத்தவன் உழைப்பில் வாழ்பவனை விட
   ஊனமாய் இருப்பவன் சிறந்தவன்

    இயற்கையை இரசிக்க தெரியாதவனுக்கு
    கண்ணிருந்தும் பயனில்லை

   உயர்ந்த எண்ணம் உன்னை
   வான் வரை உயர்த்தும்

   வற்றலாய் காய்வதை விட
   வரிக்குதிரை போல் ஓடுவது நல்லது

   கடன் வாங்கி காற்றை வாங்காதே

  நன்றி 
  உதய்ஸ்ரீ 

No comments:

Post a Comment