Tuesday, November 28, 2017

த000022 - அன்றும் இன்றும் என்றும் - கவிதை- உதய்ஸ்ரீ

6/11/14
கவிதை- உதய்ஸ்ரீ 

                               அன்றும் இன்றும் என்றும் 



அமைதியாய் இரு
அழகாய் சிரி
அருமையாய் பேசு
அன்பாய் பழகு

ஆகாயம் போல் உதவு
ஆதாயத்தோடு பழகாதே
ஆனைப்போல் நட
ஆணவத்தோடு நடக்காதே

இன்பமாய் இருக்க
இழிவானவற்றை செய்யாதே
இயன்றவரை சிறிதேனும்
இல்லாதவருக்கு உதவிசெய்

ஈடில்லா இவ்வாழ்க்கையை
ஈனத்தனத்தால் அழித்திடாதே
ஈமக்கடன் போகும்வரை
ஈகையோடு நடந்துக்கொள்

உடல் மண்ணுக்கு
உயிர் விண்ணுக்கு
உடுக்கைபோல் வாழ்வதை விட்டு
உருப்படியாய் யோசி

ஊற்றருவி போலிருந்து
ஊருக்கு வளம் செய்
ஊமத்தம் காயை போல்
ஊமையாய் இருக்காதே

எள்ளல் பேசி வாழாதே
எடுத்த காரியத்தில் உறுதியாய் இரு
எருது போல்  உழைத்து
எறும்பு போல் சேமி

ஏட்டில் படிப்பதை
ஏப்பம் விட்டே போகாதே
ஏன்னென்று கேள்வி எழுப்பும்முன்
ஏன் நடந்தது என்று யோசி

ஐப்பசியில் விதைத்த நெல்
ஐயம் இல்லாமல் அறுவடை செய்யலாம்
ஐயாயிரம் காலமானாலும்
ஐயம்மில்லாமல் நீ வாழலாம்

ஓடையில் நீர் நீரைந்தால்
ஒய்யாரமாய் ஓடம் போகலாம்
ஒருஓட்டை இருந்து விட்டால்
ஓடமும் முழுகிப்போகலாம்

ஓடி ஓடி வாழ்வதை விட்டு
ஓரிடத்தில் வாழப்பார்
ஓயாமல் பேசி பேசி
ஓட்டாண்டியாய் ஆகிவிட்டதே

நன்றி 
உதய்ஸ்ரீ 

No comments:

Post a Comment