Friday, November 10, 2017

த000010-போனவன காணலையே - கவிதை - உதய்ஸ்ரீ

10/11/17
5:மாலை 
கவிதை - உதய்ஸ்ரீ
                                               போனவன காணலையே


Image result for upset indian womans images
போனவன  காணலையே

பொழுதுமட்டு சாஞ்சிடிச்சி
போகும்பாத தெரியல
பெரும்மூச்சு ஓயல ...

வீதிமுழுக்க அலஞ்சிப்புட்ட
விட்டு போனவ திரும்பவில்ல
வீட்டு செவத்துல சாஞ்சியேத்தா
விடியுவர  நின்னுபுட்ட...

வீதிவழிபோறவனு வெறிச்சிதா எனப்பாக்க
வீடு திரும்பு ஆடு மாடு
வீட்டு செவத்துல குத்தவைக்க
விட்டில் பூச்சும்  எனப்பாத்து
விடியுவர துணைக்கிருக்க ....

போனவன  காணலையே
பொழுதுதா சாஞ்சிடுச்சே,..

காத்தடிச்சி காத்தடிச்சி
ஈர துணியு உலர்ந்திடுச்சி
பொலபொலன்னு அழுததில
மொத்த துணியு  நனைஞ்சிடுச்சி..

உச்சி வெயிலு அடிச்சதுல
உடம்புதா கருத்திடுச்சி
கட்ட எறும்பு கடிச்சதுல
காலுதா  வீங்கிடுச்சி
காலால நடந்து நடந்து
காய்ப்புதா  காச்சிடுச்சி
கஞ்சிக்கு வழியுமில்ல
கருகமணியு அறுந்திடுச்சி....

சித்தாலப்பாக்கம் போயி
சீட்டுதா குலுக்கிப்பாத்தா
கொட்டு மழையிலையு
கொண்டவன  தேடிப்பாத்த.....

ஆத்து குளத்துலயு
அயில மீன கேட்டுப்பாத்தா
அரச புரசலா ஊரு ஏச
அசிங்க பட்ட

போனவன  காணலையே
பொழுதுதா சாச்சிடுச்சே.....

சட்ட பொத்தானையு
தச்சிதா மடிச்சிவெச்ச
சாக்கு மூட்டையல்லா
உருட்டியே தேடிப்பாத்த
துண்டு சீட்டையு
துடுப்பாக்கூட விட்டுபோல....
துடிக்கு என்மனச
தூர விட்டு போனவனே

போனவன காணல
பொழுதுதா சாஞ்சிடுச்சே......

நன்றி
உதய்ஸ்ரீ

No comments:

Post a Comment