பேய்களின் திருவிழா
3:பகல்
பிறப்பு 28/2/15
வர்ணனை : உதய்ஸ்ரீ
பேய்களின்திருவிழா
போர்க்களத்தில் போருக்குப்பின் சிதையுண்ட சதை பிண்டங்கள், கைவேறு, கால் வேறுமாய், இலை உதிர்காலத்து சருகுகள் போல் சிதைந்துகிடக்க, கோட்டானும் , குறுநரியும் ஊளையிட, பேயும், காட்டேரியும்,திருவிழா வந்து விட்ட து என்று பறை கொட்ட,பேய் கூட்டங்கள் தலைவிரித்து நாலாதிசையிலும்மிருந்து ஓடிவர மழை பெய்தால் ஏற்படும் நீர் தேக்க குட்டைகள் போல், எங்கும் இரத்தம் தேங்கி உரைத்து கிடைக்க, சிறு நரி கூட்டங்கள், அக்குட்டையில் குதித்து விளையாட, பேய்களும், நரிகளும், ஒன்றன் மேல் ஒன்றாய் விழுந்து சண்டையிட்டு, பிண்டங்களை அள்ளிக்கொண்டு ஓட, இத்தலை எனக்குத்தான் என்று ஒன்றுடன் ஒன்று உருண்டு புரள, இதை பார்த்த கழுகு இடை பூந்து அந்த தலையை கவ்விக்கொண்டு போக, கிடைத்ததே போதும்மென்று யானை காலில் மிதிபட்டு நசுக்கி பிதுங்கிய மூளையை கையால் அள்ளி ஒவ்வொரு விரலாக உச்சிட்டு நக்கிய காட்டேரியை தள்ளிவிட்டு அதன் அருகில் கிடைத்த பேருடலை தன் அலகால் கவ்விக்கொண்டு ஓடிய கழுகு பெரிய ஆலமரத்தின் விழுதில் வைத்துக்கொண்டு தன் கால் விரல்களால் அவை விழுந்து விடாமல் கெட்டியாக பிடித்தபடி, மற்றவர்கள் எங்கே வந்து பிடுங்கிவிடுவார்களாலோ என்ற பயத்தில் மரக்கொத்திபோல் வேகமாய் கொத்தி சாப்பிட, பிண்டத்தின் நரம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் பீச் சென்று அதன் முகத்தில் பட்டு தெறிக்க அதை சிறிதும் பொருட்படுத்தாது தன் இறக்கையால் தள்ளிவிட, அந்த இறக்கையிலிருந்து ஒழுகும் இரத்தம் ஆறென தரையில் பாய்த்தோட, போர்க்களத்தில் தன் ஒற்றை கைகால்களை இழந்து உயிர் பிழைத்த ஒருவன் உண்ண உணவின்றி தவிக்க அவன் சிறுகுடலை பெருங்குடல் கவ்விதின்னா, தன் ஒற்றை கையால் தன் வயிற்றை பிடித்தபடி உடல் தரையில் தேய்த்து இழுத்தபடி மெல்ல மெல்ல நகர்த்துவந்து பேய்களுடன் பேய்களாய் தானும் கீழ்விழும் இரத்தத்தை தன் ஒற்றை கையால் பிடித்து நாக்கால் நக்கி நாய்களுடன் நாய்களாய் தன் பசியை அடக்கினான்..............
நன்றி
உதய்ஸ்ரீ

No comments:
Post a Comment