Wednesday, November 15, 2017

த000012 - கனவு பூக்கள் ( கனவுக்குள் கனவு ) - உதய்ஸ்ரீ

4/2/13
கவிதை: உதய்ஸ்ரீ 
3.59 பின்
                             கனவு பூக்கள் ( கனவுக்குள் கனவு )
                                                                                                                   
Image result for dream imagesதூரிகை கொண்டு ஓவியம் தீட்ட எண்ணி
வண்ணங்களை பார்த்தேன்- வண்ணங்களோ
வான வில்லாய் விண்ணுக்கு ஓடின,

பூக்களை தொடுக்க எண்ணி
தோட்டம் சென்றேன் - பூக்களோ
தன் சிறகுகளை விரித்து விண்ணுக்கு
பறந்தோடின வண்ணத்துப்பூச்சிகளாய்,

காகிதம் கொண்டு கவிதையெழுத எண்ணி
பேனாவை எடுத்தேன் பேனாவில் உள்ள மையோ
மறைந்து ஓடி கருமேகங்களாய் விண்ணில் சூழ்ந்தன

வியப்புக்கு எல்லையில்லை அவைகள்
செய்யும் செயல்களை எண்ணி எண்ணி
எண்ணியே கண்ணயர்ந்தேன்
கண்ணயர்ந்தவள் திடீரென்று கரைந்து
மழையாய் விண்ணிலிருந்து
தட, தட வென விழுந்தேன்!!!.......

திடுக்கிட்டேன்!!!!....
 எல்லாம் மாயை.!!!!.....
ஆம் எல்லாம் கனவு பூக்கள்,

நன்றி
உதய்ஸ்ரீ



No comments:

Post a Comment