18/1/13
12: 58 இரவு
கவிதை - உதய்ஸ்ரீ
பாரதியின் மேல் காதல் கொண்டால்
கள்வெறி கொள்ளுதடா
உந்தன் கட்டழகு கவிதை கண்டு
பித்தாகி அலைகின்றேன்- என்னை
பிரிந்தே நீ எங்கு சென்றாய்,
பட்டங்கள் பல படித்தும்
நீ ஏன் பட்டினியாய் கிடந்தாய்
சட்டங்கள் ஆளுவதற்கு உன்போல்
ஜகத்தினில் யாருமில்லை,
உன்னை நினைக்கையிலே
என்னெஞ்சு வேகுதடா
ஊரார் உனைப்புகழ்ந்தால்
பெருமிதம் கொள்ளுதடா,
காத்து கிடக்கின்றேன் நானோ
நித்தம் காதலால் தேய்கின்றேன்
மாற்றும் மனதின்றி உன்மேல்
மதிகெட்டு அலைகின்றேன்
உன்னை போற்றி புகழ்ந்திடவே
புது வெள்ளம் தோன்றுதடா
பார்க்கும் திசையெல்லாம்
உன்பிம்பம் காணுதடா
கருமை நிறம் கண்டால்
கள்வெறி கொள்ளுதடா
தேற்றும் ஆளின்றி நாளும்
என் தேகம் மெலியுதடா.
நன்றி
உதய்ஸ்ரீ
Very Nice
ReplyDelete