20/11/17
14:38 மாலை
கவிதை - உதய்ஸ்ரீ
அர்த்தநாரீஸ்வரர்
இரவை பகலாக்கி
வீதியை படுக்கையாக்கி
அண்டிப்பிழைக்கும் -
கயவர்களுக்கு
போர்வையாய் வாழும் அவலம் ஏன்,
குன்றின் மீது விளக்கேற்றிய போதிலும்
கொல்லைப்புற வாசலை அடைத்த மாந்தர்
பிறந்த மண்ணல்லவா,
தாய்தந்த மார்பகம்முண்டு
தந்தை தந்த தோளுண்டு
ஊர் தந்த உரமுண்டு
உயர்ந்து வாழும் எண்ணம் கொள்ளு,
கையேந்தும் நிலை தள்ளு
துணிந்து பேசும் விதை கொள்ளு
ஏலனப்பொருள் நீ இல்லை
ஏந்தி வாழும் நிலை எதற்க்கு
சமத்துவம் தந்தாள் போதாதென்று
சமபந்தி விருந்து கேளு,
இப்பிறவியை தந்தது கடவுளே அன்றி
மனித குற்றம் ஏதும்மில்லை
மண்ணை ஆளவும் செய்திடலாம்
மகத்துவம் எல்லாம் நீ புரிந்திடலாம்
காம கசடுக்கு பணித்து போகும் நிலைதனை
மாற்றி ஒரு அடி எடுத்து வை நீ.....................................
ஆண் பெண் இரண்டையும் படைத்தான்
இரண்டையும் சேர்த்தே உன்னுள் படைத்தான்
படைப்பில் குற்றம் செய்திட வில்லை
இரண்டின் அழகையும் உனக்குள் வைத்தான்
கூனிகுறுகும் வாழ்க்கை எதற்க்கோ
புதருக்குள் வாழும் நீலைதான் எதற்க்கோ
மாற்ற நினைத்தால் மாற்றிடலாம்
மண்டி இடுவதை விட்டு விடு
கடவுளே அன்றி வேறொருவர் முன்னும்
தலைகுனிவதை விட்டு விடு
இரவை பகலாக்கி
விடியலை கைக்குள் அடக்கி வைக்கும்
முகம்மதை கிழித்த எறிந்து விடு
இந்த நிலைதனை முழுதாய் எறிந்து விடு.....
உண்டி குலுக்கும் வாழ்க்கை விட்டு
உலகில் உனக்கொரு இடம் தேடு
அண்டி பிழைப்பது மோசம் என்று
உனக்கென்றோர் அடையாளம்
காட்டியே உயர்ந்து நில்லு
அரவாணிகள் என்றொரு பேர் எதற்கு
நீயே அர்தநாரீஸ்வரராய் நீ இருக்க ................
அரவாணிகள் என்றொரு பேர் எதற்கு
நீயே அர்தநாரீஸ்வரராய் நீ இருக்க ................
அர்த்தநாரீஸ்வரரே போற்றி
அகிலம் ஆண்டாய் போற்றி
அபயம் தந்தாய் போற்றி
அம்மையும் அப்பனுமானாய் போற்றி
ஆதி மூலமே போற்றி
அண்ட சராசரமே போற்றி
அனுதினம் காப்பாய் போற்றி
ஆபத் பாண்டவனே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி ............
பூர்வஜென்ம பாவம் தீர்ப்பாய் போற்றி
மூ உலகை ஆள்பவனே போற்றி
ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
வடக்கு தெற்கும் ஆனாய் போற்றி
கிழக்கிலும் மேற்கிலும் உதித்தாய் போற்றி
பார் கடல் அமுதே போற்றி
பராக்கிரமசாலியே போற்றி
தீமைதந்தே வாழ்வில் உண்மையை உணர்த்தினாய் போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி.......
போற்றி போற்றி போற்றி போற்றி ................
படைதனை வென்றாய் போற்றி
பாமரனை காத்தாய் போற்றி
கலியுக பரனே போற்றி
ஜடாயுதம் தரித்தாய் போற்றி
சூல நாதனே போற்றி
சூரிய பிழம்பே போற்றி
சுடலை நாதனே போற்றி
முனீஸ்வரனே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி............
போற்றி போற்றி போற்றி போற்றி..............
நன்றி
உதய்ஸ்ரீ